பெருந்துறை சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பெறப்பட்ட 92 மனுக்களில் 16 மனுக்களுக்கு எம்எல்ஏ- எஸ். ஜெயக்குமார் மூலம் உடனடித் தீர்வு காணப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கேட்பு கேட்கும் முகாம் இன்று நடைபெற்றது ஒவ்வொரு பிரதி மாதம் கடைசி சனிக்கிழமை இந்த குறை கேட்பு முகாம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
அதன்படி நடைபெற்ற முகாமில் பல்வேறு கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா சாலை வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்தும் சான்றிதழ் வருவாய் துறைக்கு சொந்தமான சான்றிதழ் கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட 92 விண்ணப்பங்களில் 16 விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. கள்ளியம்புதூர் நந்தகுமார் ஒருங்கிணைப்பில் 4 சவரத் தொழிலாளர்களுக்கு சவரத் தொழில் உபகரணங்களை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுதிமொழி குழு உறுப்பினர் ஜெயக்குமார் வழங்கினார். மேலும் இரண்டு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது, கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அருள் ஜோதி கே செல்வராஜ், பெருந்துறை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ், பெருந்துறை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் விஜயன் என்கிற ராமசாமி,
சென்னிமலை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராம்ஸ் என்கிற ராமசாமி, ஊத்துக்குளி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சி. டி. ரவிச்சந்திரன், ஊத்துக்குளி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தனசேகர், ஊத்துக்குளி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சக்திவேல்,
பெருந்துறை பேரூர் கழக செயலாளர் கல்யாண சுந்தரம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூர் கழகச் செயலாளர் கே எம் பழனிச்சாமி, காஞ்சிக்கோயில் பேரூர் கழகச் செயலாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் சாமிநாதன், கணக்கம்பாளையம் சதீஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்