Close
செப்டம்பர் 20, 2024 4:10 காலை

அம்மா உணவக ஊழியர்களுக்கு எட்டு மாதங்களாக ஊதியம் இல்லை: பாஜக நிர்வாகியிடம் புகார்

புதுக்கோட்டை

பாஜக மூத்த தலைவர் எச். ராஜா

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் பணிபுரியும் 24 பேருக்கு கடந்த எட்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது குறித்து பாரதிய ஜனதா கட்சி தக்க நடவடிக்கை எடுக்கும் என்றார் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா.

பின்னர் செய்தியர்களிடம்  எச். ராஜா மேலும் கூறியதாவது: புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட இரண்டு அம்மா உணவ கத்தில் பணிபுரியும் 24 பெண்களுக்கு எட்டு மாத கால ஊதியம் வழங்கவில்லை ஏற்கெனவே பாரதிய ஜனதா கட்சியிடம் முறையிட்டதால் போராட்டங்கள் நடத்தப்பட்டது அப்போது ஊதியம் வழங்கப்பட்டது மீண்டும் 8 மாத காலம் ஊதியம் வழங்காததை முறையிட்டு உள்ளனர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மீண்டும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ராணியார் மகப்பேறு மருத்துவமனை மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் அம்மா உணவகத்தில் பணி புரியும் 24 பெண்களுக்கு எட்டு மாத ஊதியம் வழங்காததால் அவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி  உள்ளது. மேலும் இரண்டு அம்மா உணவகத்திலும் மளிகை பொருட்கள், அரிசி உள்ளிட்டவை நகராட்சி மூலம் வழங்கப்படாமல் உள்ளது.

பல்வேறு நிகழ்விற்காக புதுக்கோட்டைக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர்  எச். ராஜாவிடம் புதிய பேருந்து நிலையம் அருகே அம்மா உணவக பணியாளர் பெண்கள் நேரில் சந்தித்து இதுபோல் எங்களுக்கு எட்டு மாதம் ஊதியம் வழங்கவில்லை எங்களுடைய வாழ்வாதாரம் சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம்.

மேலும் மளிகை சாமான் உள்ளிட்ட அரிசி பொருட்கள் நகராட்சி நிர்வாகம் வழங்குவதில்லை என்றும் அவரிடம் தெரிவித்தனர். இது குறித்து உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top