Close
செப்டம்பர் 20, 2024 1:30 காலை

முடிவடைந்தது வாக்கு எண்ணிக்கை: கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ்

தேர்தல்

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ்

34 ஆண்டுகளுக்குப் பிறகுஇ காங்கிரஸ் அதிகமான வாக்குகள் மற்றும் இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கெடுப்பு மே 10ஆம் தேதி நடத்தப்பட்டது.அதை தொடர்ந்துஇ இன்று(மே 13) அந்த வாக்குகள் எண்ணப்பட்டன.224 இடங்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 113 இடங்களை கைப்பற்றினால் தனி பெரும்பான்மை கிடைக்கும் என்ற நிலையில்இ காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளது.காங்கிரஸை தொடர்ந்துஇ பாஜக 65 இடங்களிலும்இ மதசார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.அது போகஇ கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா மற்றும் சர்வோதய கர்நாடக பக்ஷா ஆகிய கட்சிகள் தலா 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.இரண்டு தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட 43% வாக்குகளை பெற்றுள்ளது. பாஜக 35.9% வாக்குகளையும்இ மதசார்பற்ற ஜனதா தளம் 3.32% வாக்குகளையும் பெற்றுள்ளன.முதல் முறையாக கர்நாடகாவில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி 0.58மூ வாக்குகளை பெற்றுள்ளது. மேலும்இ நோட்டாவுக்கு 0.69மூ வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் வாக்குரிமை யைப் பயன்படுத்திய 2.6 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் நோட்டாவை தேர்ந்தெடுத்துள்ளனர். நோட்டா என்றால் ‘யாருக்கும் ஓட்டளிக்கவில்லை’ என்று அர்த்தமாகும். 34 ஆண்டுகளுக்குப் பிறகுஇ காங்கிரஸ் அதிகமான வாக்குகள் மற்றும் இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.1989ஆம் ஆண்டு வீரேந்திர பாட்டீலின் ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் 43.76% வாக்குகளைப் பெற்று 178 இடங்களை வென்றது. அதற்கு பிறகுஇ இப்போது தான் காங்கிரஸுக்கு இவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளன.

காங்கிரஸின் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் உணர்ச்சி வசத்துடன் பேட்டி அளித்துள்ளார்.கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது இதனிடையே, காங்கிரஸின் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் உணர்ச்சிவசத்துடன் பேட்டி அளித்துள்ளார்.

224 இடங்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 113 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே ஒரு கட்சியால் தனித்து ஆட்சி அமைக்க முடியும்.

ஆனால், இறுதி கருத்துக்கணிப்புகள் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்றும் கூறி இருந்தது.

இந்நிலையில், அந்த கருத்துகளையெல்லாம் பொய்யாக்கி கிட்டத்தட்ட 136 இடங்களில் காங்கிரஸ்  வெற்றி பெற்றுள்ளது.
இது குறித்து பேட்டியளித்த காங்கிரஸின் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார், கர்நாடகாவை நான் காப்பாற்றுவேன்என்று சோனியா காந்தியிடம் தான் வாக்குறுதி அளித்ததாக கூறியுள்ளார்.

கர்நாடகாவை நான் காப்பாற்றுவேன் என்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு உறுதியளித்திருந்தேன். சிறையில் என்னை சந்திக்க சோனியா காந்தி வந்ததை என்னால் மறக்க முடியாது  என்று டி.கே. சிவக்குமார்  கூறியுள்ளார்.
முதல்வர் பதவிக்கு போட்டியிடும் தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவகுமார், காங்கிரஸ் அலுவலகம் எங்கள் கோவில். அடுத்த கட்ட நடவடிக்கையை காங்கிரஸ் அலுவலகத்தில் முடிவு செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

எனது தலைவர் சோனியா காந்திக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். சித்தராமையா உட்பட எனது மாநிலத்தில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், இது எனக்கான வெற்றி மட்டுமல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top