மாநிலம் தழுவிய அளவிலான இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) நடைபயணக் குழுவினருக்கு புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வே இடங்ளில் ஞாயிற்றுக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன.
மக்களை வாட்டி வதைக்கும் ஒன்றிய அரசின் நவீன தாராளமயக் கொள்கையை எதிர்த்து, கடுமையான உயர்ந்து வரும் விலைவாசி உயர்வுகளைக் கட்டுப்படுத்தக் கோரி, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உருவெடுத்துள்ள வேலையின்மைக்கு தீர்வுகாண வலியுறுத்தி உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தின் 7 முனைகளில் இருந்து இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் கடந்த மே 20 முதல் வரும் 30-ஆம் தேதி வரை பிரசாரப் பயணம் நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து திருச்சியை நோக்கி சிஐடியு மாநில உதவிப் பொதுச் செயலாளர் தலைமையில், மாநில செயலாளர் கே.தங்கமோகனன் உள்ளிட்டோர் கொண்ட பயணக் குவினருக்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, குளவாய்ப்பட்டி, வல்லத்திராகோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டன.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுபிரமணியன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநில உதவிப் பொதுச்செயலாளர் வி.குமார், மாநில செயலாளர் கே. தங்க மோகன், மாநில துணைத் தலைவர் பி.சிங்காரம், மாநில செயலாளர்கள் எம்.சிவாஜி, ஏ.ஸ்ரீதர், எஸ்.தேவமணி உள்ளிட்டோர் பேசினர்.