Close
செப்டம்பர் 19, 2024 11:05 மணி

இடதுசாரிகள், ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை சார்பில் மாநாடு

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் நேற்று கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலையின் மாநாடு அறிவிப்பு கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் க.விடுதலைக்குமரன் பேசுகிறார்.

இடதுசாரிகள், ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்கும் விதமாக கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலையின் சார்பில்  பிப்.18 -ல்  தஞ்சாவூரில் ஐந்தாவது மாநில மாநாடு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்கும் விதமாக, கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலையின் சார்பில் பிப்.18 ல் ஐந்தாவது மாநில மாநாடு தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.சி. விடுதலைக் குமரன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலையின் மாநாடு அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் துணைத் தலைவர் இரா.அருணாச்சலம் தலைமை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெய.சிதம்பரநாதன், பொதுச் செயலாளர் க.சி.விடுதலைக்குமரன், துணை பொதுச் செயலாளர் இராமர் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

கூட்டத்தில் மக்கள் விடுதலை பண்பாட்டு பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பாட்டாளி, நிர்வாகிகள் செல்வராஜ், சதாசிவம், வீரக்குமார், செந்தில்குமார், சங்கர், ஜோதிவேல், அருண்குமார், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: விவசாயத்தை பாதிக்கிற, தனியாருக்கு சாதகமாக உள்ள நில ஒருங்கி ணைப்புச் சட்டம் 2023 திரும்ப பெற வேண்டும், பல நூறு உயிர்களை பலி கொடுக்கின்ற, ஆயிரக்கணக்கான குடும்பங்களை சீரழிக்கிற நிலைமைகளை உணர்ந்து தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டின் வேலைகள் அனைத்தும் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும், குலக்கல்வி முறையை கொண்டு வருகின்ற, மனுதர்மத்தை வலியுறுத்துகின்ற புதிய கல்விக் கொள்கையை திரும்பத் பெற வேண்டும்.

ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை பாழாக்கும் நீட் உள்ளிட்ட உயர்கல்வி தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும், மத்திய, மாநில அரசு துறைகள் மற்றும் பொது துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
மக்களுக்கு சேவை செய்கின்ற பொதுத்துறை நிறுவனங்க ளை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்த மூன்று வேளாண் சட்டங்கள் திரும்ப பெறுதல், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் உள்ளிட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

முன்னாக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் க.விடுதலைக்குமரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் முடிந்த பின்பும் ஏழை, எளிய அன்றாட மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப் படவில்லை.

இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி அனைவருக்கும் இருக்க இடம், உணவு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவேற்றப் படவில்லை, இந்தியாவையும், தமிழ்நாட்டையும் மாறி மாறி ஆண்டு வந்துள்ள கட்சிகள் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தவறிவிட்டது.

ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன, சிறு தொழில்கள் நசிந்துள்ளது நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது, இளைஞர்கள் வேலை வாய்ப்பு, பெண்களின் கோரிக்கை தீர்வு காணப்படாமல் உள்ளது.

இந்த நிலைமைகளை மாற்றிட நாட்டின் இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து ஒரு பெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியமான காலகட்டத்தில் இருக்கின்றோம்.

இதை வலியுறுத்தி வருகிற 2024 பிப்ரவரி 18, 19 ம் தேதிகளில் தஞ்சாவூரில் ஐந்தாவது மாநில மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளோம். இந்த இரண்டு நாள் மாநாட்டில் இடதுசாரிகள் கட்சியின் தலைவர்கள், ஜனநாயக சக்திகள், முற்போக்காளர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் மற்றும் நாட்டின் தலைசிறந்த அறிவாளிகள் பங்கேற்கும் பொது மாநாடும் நடைபெறுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top