கோபி நகராட்சி சாதாரண கூட்டம் திமுக சேர்மன் என்.ஆர் நாகராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பல தீர்மானங் கள்நிறைவேற்றப்பட்டது.
திமுக அரசை கண்டித்து அதிமுக நகர செயலாளர் பிரினியோ கணேஷ் தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் தமிழ்செல்வன், சென்னியப்பன், ஜெயக்குமார், சுமையாபானு, கார்த்தி, ராமன், வாணி, பிரியதர்சினி, பிரதிபாள்தனசேகர், நாகராஜ் ஆகிய 12 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து, பிரினியோ கணேஷ் கூறியதாவது: தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் உயிரிழப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருள் புழக்கம், என சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்தும் இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் நகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தோம் என்றார்.