Close
செப்டம்பர் 20, 2024 1:40 காலை

 தமிழ்நாடுஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

தஞ்சாவூர்

தஞ்சையில் மதிமுக சார்பில் நடைபெற்ற கையெழுத்தியகம்

 தமிழ்நாடுஆளுநர் ஆர்.என்.ரவியை இந்திய குடியரசு தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தஞ்சையில் மதிமுக  சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது

இந்திய அரசியல் சாசனத்திற்கு விரோதமாகவும், தமிழ்நாட்டு உரிமைகளுக்கும், மக்களுக்கும் எதிராக செயல் பட்டு வரும் , தமிழ்மொழி, பண்பாடு கலாச்சாரம் இவற்றுக்கு எதிராகவும் பேசி வரும், நால்வருணத்தை போதிக்கும் சனாதான கொள்கைகளை வலியுறுத்துகின்ற, தொல்காப்பியர் முதல் வள்ளுவர் வரை இழிவு படுத்தி பேசி வந்து, தற்போது சாதி, சமயம் இல்லை, இவ்வுலகில் பிறந்த அனைவரும் சமம் என்று சமத்துவத்தை போதித்த வள்ளலாரையும் இழிவு படுத்தி பேசிய தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழ்நாட்டு ஆளுநர் பொறுப்பில் இருந்து பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூல 20ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்ற வருகிறது

அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு மதிமுக மாவட்ட செயலாளர் வி.தமிழ்ச்செல்வன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாநகர செயலாளர் கோ.துரைசிங்கம் முன்னிலை வகித்தார்.

திமுக மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார்.திமுக மாநகர செயலாளர் தஞ்சாவூர் மாநகர மேயர் சண்.ராமநாதன்,  துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி,

திமுக ஒன்றிய செயலாளர் முரசொலி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் சி.அமர்சிங், காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி. ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் என்.பாலசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா ரவி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.எம். ஜெய்னுலாப்தீன், மதிமுக ஒன்றிய செயலாளர்கள் பி.மாணிக்கவாசகம், ச. அசோக், மணிகண்டன், ராதா மணாளன், பாஸ்கரன், மணிவாசகம்,

தஞ்சை மாநகர அவைத் தலைவர் நாகராஜன், பொருளாளர் ராஜேந்திரன் , துணைச் செயலாளர் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் சாமி.தமிழ்ச்செல்வன், மாணவரணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், இணையதள பொறுப்பாளர் சிவராஜன்,மாவட்ட பிரதிநிதிகள் அன்புச்செல்வன், பெருமாள் ,செல்வம், கதிர்வேல்,சுரேஷ் குருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top