Close
நவம்பர் 22, 2024 10:05 காலை

வீடுகட்டும் திட்டத்தில் பாஜக அரசியல் ஆதாயம் தேடுவதாக காங்கிரஸ் கட்சி புகார்

புதுக்கோட்டை

பாஜக மீது காங்கிரஸ் நிர்வாகி புகார்

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளதுடன்  பாஜகவினர் மீது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் சேதுராப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட ஒச்சம்பட்டியில் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் உள்பட பாஜகவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், அது போலியான நிகழ்ச்சி என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதியின் ஊராட்சி 1 -ஆவது வார்டு உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினருமான மா. முருகானந்தம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து  அவர் அளித்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம், சேதுராப்பட்டி ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த 2021 -ஆம் ஆண்டில் 5 பேருக்கும், 2022 -ஆம் ஆண்டில் ஒருவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதில், இருவர் வீடு கட்டி முடித்துவிட்டனர். 3 பேர் பணியைத் தொடங்கவில்லை. முத்துக்கருப்பன் மனைவி கருப்பாயி என்பவரின் பெயரில் வழங்கப்பட்ட பணி ஆணையின்படி வேலை நடைபெற்று வருகிறது. இரு முறை அரசு நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசியல் ஆதாயத்துக்காக, உள்நோக் கத்துடன் அவரது வீட்டுக்கு பூமி பூஜை போட்டுள்ளனர். போலியாக வீடு கட்டுவதற்கான ஆணை ஒன்றையும் அந்த நிகழ்ச்சியின்போது பயனாளி கருப்பாயியிடம் வழங்கியுள் ளனர். இதுகுறித்து திருமயம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் ஊராட்சி மன்ற நிர்வாகிகளுக்கும் எந்தத் தகவலும் அளிக்கவில்லை.

இத்திட்டத்தை நிறைவேற்றும் மாநில அரசை அவமானம் செய்யும் படியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top