மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மணிப்பூர் மாநிலத் தில் அமைதியை உருவாக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் (பொறுப்பு) எம்.ஜோஷி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சலோமி, கி.ஜெயபாலன், ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை உருவாக்க வேண்டும். ஒன்றிய அரசின் இரவு நேர மின்சாரப் பயன்பாட்டிற்கான கட்டண உயர்வு அறிவிப்பை திரும்பப் பெறவேண்டும்.
பலவகையான புறம் போக்குகளில் குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு உரிய வகை மாற்றம் செய்து மனைப்பட்டா வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் சட்டப்பூர்வ கூலி ரூ.294-ஐ முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத் தின்போது எழுப்பப்பட்டன.