Close
நவம்பர் 22, 2024 1:04 காலை

மோடி அரசைக்கண்டித்து சென்னையில் நடைபெறவுள்ள போராட்டத்தில் ஏஐடியுசி சார்பில் திறளானோர் பங்கேற்க முடிவு

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற மாவட்ட ஏஐடியூசி தஞ்சை மாவட்ட பொதுக்குழு கூட்டம்

மோடி அரசை கண்டித்து ஆகஸ்ட் 9 சென்னையில் நடைபெறும் பெருந்திரள் தர்ணா போராட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து 500 பேர் பங்கேற்பது என ஏஐடியூசி பொது குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்ட ஏஐடியூசி தஞ்சை மாவட்ட பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வெ.சேவையா தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட பொதுச் செயலாளர் ஆர் தில்லைவனம் நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார், பொதுக்குழு முடிவுகள் பற்றி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் துரை. மதிவாணன் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் க.அன்பழகன், மின்வாரிய தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலத் துணைத் தலைவர் பொன்.தங்கவேல்,. அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் த.பாஸ்கரன், கட்டுமான சங்க மாவட்ட துணை தலைவர் பி.செல்வம்,

மீனவர் சங்க மாவட்ட செயலாளர் என்.காளிதாஸ், உடல் உழைப்பு சங்க மாவட்ட துணை செயலாளர் எஸ்..பரிமளா, பொருளாளர் பி.சுதா, நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் அ.சாமிக்கண்ணு, நிர்வாகிகள் கே.எஸ்.முருகேசன், சௌந்தரராஜன்.

தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி.முத்து குமரன், நிர்வாகிகள் சரவணன், நாராயணன், கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சங்க பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச் செல்வன், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கோடீஸ்வரன்,

நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன் நன்றி கூறினார்.

பின்னர் கூட்டத்தில் தொழிலாளர்கள் போராடி பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்கள் மற்றும் தொழிற்சங்க சட்டங்களை கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தியது,

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியது, பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடுவது,

பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயல்வது உள்ளிட்ட மக்கள் விரோத கொள்கைகளை கடைபிடித்து வரும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து ஆகஸ்டு 9-ம் தேதி நாட்டின் விடுதலைக்காக பெரும் கிளர்ச்சி நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்க நாளில் சென்னையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் பெருந்திரள் போராட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஏஐடியூசி சங்கம் சார்பில் 500-பேர் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.

பெருந்திரள் போராட்டத்தை விளக்கி ஜூலை மாதம் முழுவதும் தஞ்சை மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் தெருமுனை பிரச்சார இயக்கம் நடத்துவது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சுகாதார பணிகளில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த முறையில் பணிக்கு தேர்வு செய்வதை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top