Close
நவம்பர் 22, 2024 6:57 காலை

பேரூராட்சி திமுக தலைவர் மீது திமுகவினர் உரசல்… உறவாடும் அதிமுக… பெருந்துறையில் விநோத அரசியல்..

ஈரோடு

பெருந்துறை யில் திமுக-அதிமுக விநோத அரசியல

பெருந்துறை பேரூராட்சி திமுக தலைவர் மீது திமுக கவுன்சிலர்களின் எதிர்ப்பு ஒருபுறம் .. அதிமுக கவுன்சிலர் களின் ஆதரவு நிலைப்பாடு மறுபுறம்.. திமுக, அதிமுக நடத்தும் விநோத அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெருந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட பெருந்துறை சிறப்பு நிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் 10 திமுக, 4 அதிமுக மற்றும் ஒரு காங்கிரஸ் கவுன்சிலர்கள் பதவி வகித்து வருகின்றனர்.

பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன் உள்ளார். நான்கு மாதங்களுக்கு பிறகு பேரூராட்சியின் சாதாரண கூட்டம் ஜூன் 28 -ஆம் தேதி நடந்தது.கூட்டத்தில் கலந்து கொண்ட ஆறு திமுக ஒரு காங்கிரஸ் கவுன்சிலர்கள் தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வெளிநடப்பு செய்தனர்.

அதே நேரத்தில் இரண்டு அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவாக செயல்பட்டுள்ளது அதிமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான அதிருப்தியை சமூக ஊடகங்கள் வாயிலாக அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர் .

அவர்கள் தரப்பில் கூறியதாவது: பெருந்துறைதிமுக பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் மீது கடந்த ஒரு வருடமாக பல்வேறு ஊழல் மற்றும் அதிகார போக்கு பற்றி திமுக காங்கிரஸ் கவுன்சிலர்கள் 7 பேர் பலமுறை நிர்வாகத்தை எதிர்த்து வெளிநடப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.

ஊழல் மற்றும் பல குற்றச்சாட்டுக்கு ஆளான தலைவர் ராஜேந்திரனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக காங்கிரஸ் கவுன்சிலர்கள் போராடி வருகின்றனர்.

கடந்த மாதத்தில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி பிஜேபி எம் எல் ஏ சரஸ்வதி தலைமையில் பிஜேபி கட்சியை சார்ந்தவர்கள் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்நிலையில்
கடந்த 28 தேதி பெருந்துறை பேரூராட்சி மன்ற கூட்டத்தின் போது திமுக -6 காங்கிரஸ் -1 என்று ஏழு பேர் வெளிநடப்பு செய்து விட்டனர்  அதிமுக பெண் கவுன்சிலர் 2 பேர் கூட்டத்தை புறக்கணித்தனர். திமுக – 4 அதிமுக–2 ஆக மொத்தம் ஆறு பேர் சேர்ந்து கொண்டு அனைத்து தீர்மானத்தையும் ஆதரித்து கைஎழுத்து போட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக பேரூராட்சி தலைவரை இரண்டு அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவாக வாக்களித்த போக்கு மிகவும் கண்டிக்க தக்கது. அதே நேரத்தில் வாக்கெடுப்பை புறக்கணித்த அதிமுக பெண் கவுன்சிலர்கள் இருவரையும் மனதார பாராட்டுகிறோம்.

ஆளும் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் பேரூராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய போராடும் போது
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கவுன்சிலர் இருவர் திமுகவைஆதரிப்பதுஅண்ணாதிராவிடமுன்னேற்றகழகத்தின் கொள்கைக்கும் கோட்பாடுகளுக்கு முரண்பட்ட செயல் ஆகும்.

திமுக ஊழல் கருணாநிதியை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தான். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். நாம் எப்போதும் திமுக எதிர்ப்பு அரசியல் செய்ய வேண்டுமே தவிர, ஆதரவு நிலைக்கு செல்ல கூடாது.

திமுக வேண்டாம் என்று சொல்லி தானே மக்கள் நமக்கு ஆதரவு கொடுத்து வெற்றி பெற வைத்தனர் திமுகவுக்கு வாக்களித்த அதிமுக கவுன்சிலர்களின் செயல் இரட்டை இலைக்கு வாக்களித்த மக்களுக்கு எதிரானது.

திமுக பேரூராட்சி நிர்வாகத்தை எதிர்த்து பாஜக மிக பெரிய போராட்டம் நடத்தும்போது உலகில் 7 ஆம் இடத்திலும், இந்தியாவில் மூன்றாம் இடத்திலும், தமிழ்நாட்டில் முதல் இடத்தில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திமுக பேரூராட்சி பெருந்துறை நிர்வாகத்தை எதிர்த்து மிக பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டும் என்பது அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் உண்மை தொண்டர்கள் கருத்தாக உள்ளது என்றனர்.

இதுகுறித்து திமுக மற்றும் அதிமுக கட்சியினர் கூறுகையில்,  பெருந்துறை பேரூராட்சியில் தி.மு.க, அ.தி.மு.க என 15 பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த நான்கு மாதமாக கூட்டம் நடைபெறாததால் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிவுநீர் கால்வாய், மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளை செய்து தரவில்லை . இது தொடர்பாக கவுன்சிலர்களின் கோரிக்கைக்கு பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் செவி சாய்க்கவில்லையாம்.

இதன் காரணமாக பேரூராட்சியில் 10 திமுக கவுன்சிலர்களும் தலைவருக்கு எதிராக இருந்து வந்தனர் இது தொடர்பாக முதல்வரின் தனி பிரிவுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டு அது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது .இதற்கிடையில் மூன்று திமுக கவுன்சிலர்களை தலைவர் சமாதானம் செய்துள்ளார் .மற்ற ஏழு கவுன்சிலர்களை சமாதானம் செய்ய முடியாததால் அவருக்கு எதிராக உள்ளனர் .
ஆளும் கட்சியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஜூன் 28 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த இரண்டு கவுன்சிலர்கள் தீர்மானங்களுக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

இது அதிமுகவினருக்கு இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது இது தொடர்பான புகாரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்ல கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர் என்றனர்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் இப்பிரச்னையில் திமுகவினரை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலினும் அதிமுக வினரை கட்டுப்படுத்த எடப்பாடி பழனிசாமி நேரடியாக சாட்டையை சுழற்றினால் மட்டுமே பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என கட்சியினர் கருதுகின்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top