Close
நவம்பர் 21, 2024 11:27 காலை

மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை கோரி தஞ்சையில் மெழுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்ட அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர்

கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதி திரும்ப ஒன்றிய அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பில்  தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு இன மக்களுக்குமான மோதல் கலவரமாக வெடித்து, மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது.

பெரும்பான்மையான மெய்டெக் இனமக்கள், சிறுபான்மையி னராக உள்ள கும்கி மற்றும் நாகா பழங்குடியின மக்கள் பெற்றுவரும் இட ஒதுக்கீட்டு உரிமையை தர வேண்டும் என்ற பிரச்சனை மணிப்பூர் பாஜக அரசால் சுமுகமான முறையில் தீர்வு காணப்படாததால் கலவரமாக மாறி பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு இன மக்களின் பிரச்னைக ளை பேசி அமைதியை நிலைநாட்ட வேண்டிய மணிப்பூர் பாஜக அரசு கலவரத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது.

இதுவரை 150 க்கு மேற்பட்டவர்கள் இரண்டு தரப்பிலும் இறந்துள்ளனர். கிறிஸ்தவ தேவாலயங்கள் தரை மட்டமாக்கப் பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கு அதிகமாக மக்கள் தங்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் அரசு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றிய பாஜக அரசு  மணிப்பூர் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை பற்றி கவலைப்படவில்லை. பிரதமர் மோடி மணிப்பூர் கலவரத்தைப் பற்றி பேச மறுக்கிறார்.  எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கீடு செய்ய கேட்டபோது இதுவரை அதற்குரிய பதிலை சொல்லவில்லை .

இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டும், இரண்டு இன மக்களுக்கான பிரச்சினைகள் பேசி தீர்க்கப்பட வேண்டும், மணிப்பூர் மக்கள் இயல்பு நிலைக்கு மாற ஒன்றிய மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பில் தஞ்சாவூரில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழக மாவட்ட தலைவர் இரா.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

துணை தலைவர்கள் சி.பாஸ்கரன், சி.இராமலிங்கம், எஸ்.கோதண்டபாணி, பொருளாளர் ஆர்.கே.செல்வகுமார், துணை செயலாளர் எம்.சுந்தரமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் களப்பிரான், அ.சிவஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் முனைவர் கோ.பாஸ்கர் கோரிக்கை களை விளக்கிபேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் இரா.தமிழ்மணி,. கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் அய்யாறு புகழேந்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ரங்கசாமி, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன்.

மாவட்ட தலைவர் வெ.சேவையா,தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் ஓய்வூதியர் சங்க நிர்வாகி ந.பாலசுப்பிரமணி யன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ரா.பிரபாகர், துணை செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் எம்.வடிவேலன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் வி.கல்யாணசுந்தரம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் இரா.விஜயகுமார்.

அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க.அன்பழகன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் துரை.ஏசுராஜா,. இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கு.சந்துரு, அகில இந்திய இன்சூரன்ஸ் சங்க கோட்டத் தலைவர் சே.செல்வராஜ்.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நகர தலைவர் எச்.அப்துல்நசீர்,. மாதர் சங்க மாவட்ட செயலாளர் ம.விஜயலட்சுமி, இ.வசந்தி, மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் மருத்துவர் ச.சுதந்திரபாரதி, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் காரல் மார்க்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் மா. சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top