Close
செப்டம்பர் 19, 2024 11:09 மணி

மகளிருக்கான இலவச பேருந்துகளின் எண்ணிக்கை குறைப்பு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகார்

ஈரோடு

வளர்ச்சித்திட்ட பணிகளை தொடக்கி வைத்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்எல்ஏ

கிராமப்புறத்தில் இருந்து பள்ளி செல்லும் மாணவர்களின் நலன் கருதி குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். அதே போல மகளிருகாக இயக்கப்படும் பேருந்து வழித்தடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும்  முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ  குற்றம் சாட்டினார்.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கோட்டுப்புள்ளம் பாளையம் ஊராட்சி அலிங்கியம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 11 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ செங்கோட்டையன்  திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்,

அதனைத் தொடர்ந்து கோட்டுபுள்ளாம்பாளையம் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் நிதியிலிருந்து மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப் பட்டிருந்த மேல்நிலைத் தொட்டியினை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார்,

பின்னர் செய்தியாளர்களிடம்  கே.ஏ. செங்கோட்டையன் மேலும் கூறியதாவது:

அதிமுக ஆட்சியில் கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதலாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போதைய திமுக ஆட்சியில் அந்த பேருந்துகள் குறைக்கபட்டுள்ளன.

மாணவர்கள் குறிப்பிட நேரத்தில் பள்ளிக்கு செல்ல தேவை யான பேருந்துகள் இயக்கபடுவதில்லை, அரசு உடனடியாக மாணவர்கள் குறிப்பட்ட நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து அமைச்சரிடம் கேட்டால் தேவையான பேருந்துகள் இயக்கப்படுகின்றன என கூறுகிறார்.

ஆனால் மாணவர்கள் சரியான நேரத்தில் பேருந்துகள்  வருவதில்லை குறிப்பிட நேரத்தில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என கூறுகின்றனர்.  பள்ளி செல்லும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பேருந்துகளை சரியான நேரத்தில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதேபோல மகளிருகாக இயக்கப்படும் பேருந்துகளின் வழித்தடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக நிறைவேற்ற அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி சார்பில் கோரிக்கை வைப்பதாகவும் கே.ஏ. செங்கோட்டையன்  தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top