அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் .
வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிறைவு நாள் நிகழ்ச்சி புதன்கிழமை சென்னை ராயபுரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது,
அதிமுக பலமான இயக்கமாக இருந்து வருவதால் அதிமுகவில் இணைய பல்வேறு தரப்பினரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பதை இந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு தெளிவுபடுத்தி இருக்கிறது. ராயபுரம், திரு வி.க.நகர் தொகுதிகளில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக அதிமுகவில் இணைந்துள்ளனர்.
மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் விலைவாசி உயர்வு குறித்து திமுக அரசு கவலைப்படவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வியாழக்கிழமை மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற உள்ளது.
புதுடில்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவிற்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது . 38 கட்சிகள் இணைந்துள்ள கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும்.
செம்மண் குவாரி முறைகேடாக ஒதுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி ரூ. 28 கோடி முறைகேடாக சம்பாதித்துள்ளார். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி பொன்முடியை தொடர்ந்து இன்னும் சில அமைச்சர்கள் மீதும் அமலாக்கத்துறை சார்பில் விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
அமலாக்கத்துறை விசாரணையால் கலக்கமடைந்துள்ளார். அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளது செய்யப் பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர வையிலிருந்து நீக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு.
கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள பெங்களூரு சென்ற முதல்வர் ஸ்டாலின் மேக்கே தாட்டு அணை குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இப் பிரச்னையில் இதுவரை சட்டரீதியிலான போராட்டத்தை கையில் எடுக்காதது ஏன் ? இதற்கான துணிச்சல் முதல்வரிடம் கிடையாது என்றார் ஜெயக்குமார்.