Close
நவம்பர் 22, 2024 9:55 காலை

புதுக்கோட்டை மக்களவை தொகுதியை மீண்டும் கொண்டு வர வேண்டும்: மதிமுக வலியுறுத்தல்

புதுக்கோட்டை

புதுக்கோடடையில் நடைபெற்ற மதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் பேசுகிறார், மாவட்டச்செயலர் கலியமூர்த்தி

புதுக்கோட்டை மக்களவை தொகுதியை மீண்டும் கொண்டு வர வேண்டுமென  மதிமுக வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட மறுமலர்ச்சி திமுக மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் புதுக்கோட்டை எம்கேஆர். திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவர் கே.ஏ. ஆரோக்கியசாமி,  தலைமை  வகித்தார்.

நிர்வாகிகள் வி.கே.மதியழகன், அ முத்தையா,  ஆ. சுப்பையா,  செல்வராணி கணேசன்,  எஸ்.பி. ராஜா,  எஸ்.  சவரிநாதன் என். சந்திரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஜி. கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்கள் மாநில துணை பொதுச் செயலாளர் தி.மு. ராஜேந்திரன், மாநில  துணைப் பொதுச் செயலாளர்  டாக்டர் ரோஹையா, புதுக்கோட்டை   மாவட்ட செயலாளர் எஸ்.கே. கலியமூர்த்தி     ஆகியோர்     சிறப்புரை யாற்றினார்கள்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடைபெற்ற மதிமுக ஆலோசனைக்கூட்டத்தில்  பேசிய மாநில  துணைப் பொதுச் செயலாளர்  டாக்டர் ரோஹையா

கூட்டத்தில்   நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்:         கழகப் பொதுச் செயலாளர் ஆணைபடியும்,  இளந்தலைவர் துரை. வைகோ வழிகாட்டுதலின் படியும் மதுரை  மாநகரில் செப்டம்பர் 15 -ஆம் தேதி  நடைபெற உள்ள பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் திறந்தவெளி மாநாட்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 100 வாகனங்களில் எழுச்சியுடன் பங்கேற்பது என்றும் 200 இடங்களில் மாநாட்டு விளம்பரங்களை எழுதுவது.

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இடையூறு செய்திடும் வகையில் செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை அகற்றக்கோரி மறுமலர்ச்சி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தை துரிதப்படுத்தி வருகின்ற 27.7. 2023 -ஆம் தேதிக்குள் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு லட்சம் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று கழக  பொது செயலாளரிடம் வழங்குவது.
விடுதலை பெற்ற நாள் முதல் புதுக்கோட்டை தனி நாடாளுமன்ற தொகுதியாக இருந்து வந்தது ஆனால் 10 ஆண்டுகளாக நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டதாக நான்காக பிரிக்கப்பட்ட பிறகு எந்த பயனும் இல்லை. இது புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.
எனவே ஆறு சட்டமன்ற தொகுதி கொண்ட புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் உருவாக்கிட   ஒன்றிய அரசும் தேர்தல் ஆணையமும் நடவடிக்கை  எடுக்க வேண்டும்.  காவிரி- வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தினை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
புதுக்கோட்டை தஞ்சை மாவட்டங்களில் முழுமையான வறட்சி பகுதிகளுக்கு பயனளிக்கும் வகையில்  வில்லுன்னி அம்புலி ஆறுகளை இத்திட்டத்தில் இணைத்திட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருகி   வரும் மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை அரசு கலைஞர் கலை கல்லூரி மன்னர் கல்லூரிகளில் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
நீண்ட கால கோரிக்கையான ஆலங்குடி பேரூராட்சியை நகராட்சியாக மாற்றிட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுக்கோட்டை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி மற்றும் அடிக்கடி நடக்கும் விபத்து இவற்றை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை நகரில் கூடுதல் எண்ணிக்கையில் போக்குவரத்து காவலர்களை நியமித்து போக்குவரத்தை சீரமைத்திட வேண்டும்.
.புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியை புதுக்கோட்டை மாநகராட்சி எல்லைகுள் இணைத்திட வேண்டும். புதுக்கோட்டை நகரில் போக்குவரத்துக்கு உதவிட ஷேர் ஆட்டோக்களை இயக்க அனுமதியளிக்க வேண்டும்.
 புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் பெரும்பாலான அரசு பேருந்துகள் பழைய பேருந்துகளாக இயங்கிக் கொண்டிருப் பதை மாற்றி புதிய பேருந்துகளாக இயக்கிட வேண்டும்.
புதுக்கோட்டை நகரின் சீரான போக்குவரத்து திருவப்பூர் ரயில்வே மேம்பாலம் கருவேப்பிலான் கேட்  பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைத்திட ஒன்றிய அரசும் தமிழக அரசு முன்வர வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்களையும் சிறப்பு மருத்துவர்களையும் நியமித்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மணிப்பூர் மாநிலத்தில் ஆர் எஸ் எஸ் பாஜக கட்சிகளின் தூண்டுதலின் பேரில் கடந்த ஆறு மாத காலமாக நடந்து வரும் கட்டற்ற வன்முறை செயல்களையும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் கொடூர செயல்களையும் பெண்களை  நிர்வாணப்படுத்தி மனித குலம் மாண்புக்கே இழுக்கு விளைவிக்கும் செயல்களையும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வரும் குற்றவாளிகளையும் கண்டும் காணாமல் இருந்து வரும் ஒன்றிய அரசுக்கு  கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டை
மதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்
இதில், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்  காசி. சிற்றரசு  அரசியல் ஆய்வு மைய குழு உறுப்பினர் கவிஞர் அரங்க நெடுமாறன் ஆகியோர் கலந்து  கொண்டு சிறப்புரை யாற்றினர்.
ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஜி. மோகன், அறந்தை நகர செயலாளர் மறவபட்டி கே பாண்டியன், ஜெ. ஞானப்பிரகாசம், சேவை மூர்த்தி, எஸ்.பி பிரபாகரன், கே.பி. சுரேஷ், வே. நமச்சிவாயம், ஏ வீரபத்திரன், எஸ் முருகானந்தம், சேது கலையரசன், மு சண்முகநாதன் சே புகழேந்தி சி கண்ணையா.
பொதுக்குழு உறுப்பினர்கள் பி. குணசேகரன், சா செல்வம், எஸ்.கே. பழனிச்சாமி, கா பாலகிருஷ்ணன், ஸ்ரீ பாலகிருஷ்ணன், கே உமாபதி, கே ஆனந்தன், ஆர் செல்வராஜ், கே நடராஜ், ஜி .ஏழுமலை, ஆர் செல்வகுமா,ர் அரசி ரா. கருணாநிதி,
புதுக்கோட்டை  நகர செயலாளர் லதா கருணாநிதி, புதுக்கோட்டை நகர் மன்ற உறுப்பினர் சீனிவாசன், முன்னாள் பொதுகுழு பேரூர் செயலாளர்கள் கே பி செந்தில், என். அலாவுதீன்,  முத்துதுறை எஸ் மாசிலாமணி, கோ. ச. கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக நிர்வாகிகள் அண்ணாசிலைக்கு மாலை  அணிவித்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top