Close
ஏப்ரல் 6, 2025 12:29 காலை

புதுக்கோட்டையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை

பாமக நிறவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்  85 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர்  ராமதாஸின் 85 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மாவட்ட இளைஞரணி செயலாளர் வீர கமலநாதன் ஏற்பாட்டில் அறந்தாங்கி அருகே காயக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு எழுது பொருட்கள் நோட்டுப் புத்தகம் மற்றும் இனிப்புகள் மாநில பொதுக்குழு உறுப்பினர் துறையரசன் தலைமையில் வழங்கப்பட்டன.அதனை தொடர்ந்து மரக்கன்றுகளும் நடப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர்கள் சக்தி செல்வம், பெரியசாமி, மாவட்டத் தலைவர் கண்ணன், மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் மகேஷ் ஒன்றிய தலைவர் கருப்பையா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top