Close
செப்டம்பர் 19, 2024 11:09 மணி

ஒன்றிய பாஜக அரசை செப்டம்பர் 12, 13, 14 மூன்று நாட்கள் தொடர் மறியல் போராட்டம்

தஞ்சாவூர்

தஞ்சாவூர்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி தலைமையில் நடைபெற்றது.

செப்டம்பர் 12, 13, 14 மூன்று நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடத்துவதென தஞ்சையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(தெ) நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தஞ்சாவூர் கீழ ராஜவீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி தலைமையில் நடைபெற்றது.

நடைபெற்ற பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் முத்துஉத்ராபதி விளக்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கோ.சக்திவேல், பொருளாளர் என். பாலசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் வீரமோகன், வெ. சேவையா, தி.திருநாவுக்கரசு, ரெ.கோவிந்தராஜன், ஆர் இராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஒன்றிய பாசிச பாஜக மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையினால், கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளது.  அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பண்டங்கள் விலை நாளுக்கு நாள் ஏறி வருகிறது, பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வுகளும் அதிகரித்து வருகிறது.

சிறு குறு தொழில்கள் முடங்கி போய் உள்ளன. நாளுக்கு நாள் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப் படுகிற சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்தில் மாநில பாஜக அரசு இரண்டு இன மக்களை மோத விட்டு வேடிக்கை பார்க்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலவரத்தை அடக்க எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை,. பிரதமர் மோடி அவர்களும் இது பற்றி வாயை திறக்கவில்லை. மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் விவாதிக்க எதிர் கட்சிகள் வலியுறுத்தி, பாராளுமன்றத்தின் இரு அவைகளும் எட்டு நாட்களுக்கு மேலாக முடங்கி போய் உள்ளன.

ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக, மோசமான நிர்வாக நடைமுறைகளை கடைபிடித்து வரும் மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசு பதவி விலக வலியுறு த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில குழு செப்டம்பர் 12,13 ,14 ஆகிய மூன்று தேதிகளில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடத்த விடுத்த அழைப்பினை ஏற்று தஞ்சை மாவட்டத்தில் மூன்று நாட்களிலும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடத்துவது.

இந்த போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும், ஏழை,எளிய, அன்றாட உழைக்கின்ற மக்களும் பெருவாரியாக பங்கேற்று தொடர் மறியல் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுப்பது  என்று கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top