Close
செப்டம்பர் 19, 2024 11:18 மணி

காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

அரசியல்

தஞ்சையிவ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

டெல்டா மாவட்டங்களில் கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தண்ணீர் உடனடியாக திறக்க வேண்டும்  ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை மாவட்டத்தில் 10 இடங்களில் மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங் களில் ஜூன் பன்னிரண்டாம் தேதி விவசாயத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் தொடர்ந்து திறந்துவிடாத காரணத்தால் வயல்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளன.

கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்றவும், ஜூன்,ஜூலை , ஆகஸ்ட் மாதங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு உடனடியாக திறந்து விட ஒன்றிய அரசு மற்றும் காவிரி ஆணையத்தை வலியுறுத்தியும், கருகிய நெற்பயிர்களுக்கு இழப்பீடு ஏக்கருக்கு 35 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும்,

சம்பா சாகுபடிக்கான பயிர் காப்பீடு திட்டத்தை போன்று குறுவை சாகுபடிக்கும் பயிர் காப்பீடு திட்டத்தை உடனடியாக அமுல் படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளில் தஞ்சாவூர் ,திருவாரூர், நாகை ,மயிலாடுதுறை, கடலூர் ,புதுக்கோட்டை, திருச்சி ,அரியலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம்  சனிக்கிழமை(12.8.2023) நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்தில் இந்த போராட்டத்தையொட்டி  தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம், கும்பகோணம் , பாபநாசம், திருவையாறு, அம்மாபேட்டை, திருப்பனந்தாள், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி,தோகூர் உள்ளிட்ட 10 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தலைமை வகித்தார். போராட்டத்தில் மாவட்ட மாவட்ட நிர்வாகிகள் ஜி.கிருஷ்ணன் வெ.சேவையா , ம.விஜயலட்சுமி, ஆர் . இராமச்சந்திரன் ஆர்.பிரபாகர் , ஆர் .கே.செல்வகுமார் , ஆர் . ஆர்.முகில் கே.கல்யாணி, ஜி.ராமலிங்கம் , ஆர் . சதீஷ்குமார், எம் . சம்சுதீன், எம்.அய்யாராசு, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்டார் பங்கேற்று கைதாகினர்.

அரசியல்
கும்பகோணத்தில் கருகிய நெற்பயிரை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

கும்பகோணத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி தலைமையில் கருகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள்  ஊர்வலமாக வந்து அஞ்சலகம் முன்பு மறியல் போராட்டம்    நடைபெற்றது.  பாபநாசத்தில்  வடக்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.தில்லைவனம் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டம் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top