Close
செப்டம்பர் 19, 2024 7:11 மணி

நீதிமன்றத் தீர்ப்பு: பெருந்துறையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

ஈரோடு

பெருந்துறையில் அண்ணாசிலைக்கு எம்எல்ஏ ஜெயக்குமார் தலைமையில் மாலை அணிவித்த நிர்வாகிகள்

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை பெருந்துறையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

ஜூலை மாதம் 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஓ.பி.எஸ். வைத்திலிங்கம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் உள்ளிட்ட 4 பேர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு 4 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்து, அதிமுக பொதுக்குழு செல்லும் என உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் தலைமையிலான அதிமுகவினர் பெருந்துறை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கூடி பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

ஈரோடு

மேலும் நால்ரோடு மற்றும் அண்ணாசிலை பகுதியில் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய அதிமுகவினர்  அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் (எ) ராமசாமி, முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, பேரூர் செயலாளர்கள் கல்யாண சுந்தரம், பழனிசாமி, யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், துணைத்தலைவர் உமா மகேஸ்வரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அருணாச்சலம், மகளிர் அணியைச் சேர்ந்த உமா நல்ல சிவம், மணிமேகலை, கவுன்சிலர்கள் வளர்மதி, கோமதி, புனிதவதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

பெருந்துறை அண்ணா சிலைக்கு, பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள் ஜோதி செல்வராஜ் தலைமையிலான அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top