மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 1589 பேர் கைது செய்யப்பட்டனர்.
விலைவாசி உயர்வுக்குக் காரணமான பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்தும், வேலையின்றி வாடும் இளைஞர்களக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழக்கிழமை நாடுதழுவிய அளவில் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றது.
அதனொரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டங்களில் 5,000-த்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இதில் 1589 பேரை போலீசார் கைது செய்தனார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.லாசர், மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ஆகியோர் தலைமை வகித்தனார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், சு.மதியழகன், எஸ்.ஜனார்த்தனன், இடைக்கமிட்டி செயலாளர்கள் ஆர்.சோலையப்பன்,
டி.லட்சாதிபதி, ஆர்.வி.ராமையா, ஆர்.சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.முகமதலிஜின்னா, அ.மணவாளன், கி.ஜெயபாலன், டி.சலோமி, எம்.பாலசுந்தர
மூர்த்தி, சி.மாரிக்கண்ணு, டி.காயத்ரி, சிஐடியு மாநில செயலாளர் ஏ.தேவமணி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மகாதீர், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.சந்தோஷ்குமார் மற்றும் 93 பெண்கள் உட்பட 234 பேர் கைது செய்யப்பட்டனர்.
கந்தர்வகோட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், த.அன்பழகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பொன்னுச்சாமி, எஸ்.பாலசுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர்கள் வி.ரெத்தினவேல், பி.வீரமுத்து, எஸ்.கலைச்செல்வன் மற்றும் 400 பெண்களய் உட்பட 720 பேர் கைது செய்யப்பட்டனர்.
அறந்தாங்கியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.சுப்பிரமணியன், தென்றல் கருப்பையா, கே.தங்கராஜ், ஒன்றியச் செயலாளர்கள் எம்.நாராயணமூர்த்தி, நெருப்பு முருகே~;, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.கர்ணா, சேகர் மற்றும் 50 பெண்கள் உட்பட 260 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குடியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் எல்.வடிவேல், எஸ்.மணிவண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.சுசிலா, எஸ்.பாண்டிச்செல்வி, நகரச் செயலாளர்; ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன் மற்றும் 68 பெண்கள் உட்பட 134 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொன்னமராவதியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் என்.பக்ருதீன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் 61 பெண்கள் உட்பட 123 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலுப்பூரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் எம்.ஜோ~p, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.சுப்பையா மற்றும் 52 பெண்கள் உட்பட 118 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.