Close
செப்டம்பர் 19, 2024 11:21 மணி

இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜவினர் கைது

புதுக்கோட்டை

புதுக்கோட்டை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையி ட முயன்ற போது கைதான பாஜகவினர்

தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்து  இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜவினர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் விஜயகுமார் மற்றும் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் தலைமையில் புதுக்கோட்டை வடக்கு மூன்றாம் வீதியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊர்வலமாக வந்த 100 -க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் சாலையில்  தடுப்புகள். அமைத்து  பாதியிலே தடுத்து நிறுத்தினர்.

இதனை அடுத்து பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாஜகவினர் தமிழக அரசுக்கும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதனை அடுத்து பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர்பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம்  செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

புதுக்கோட்டை
புதுக்கோட்டை இந்து சமய அறநிலை.யத்துறை அலுவலகம்

மக்கள் விரோத இந்து விரோத தமிழக அரசை கண்டித்தும், இந்து விரோத மக்கள் ஈடுபட்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோரை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

தமிழகத்தில் தீண்டாமை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பெண் அடிமை, டாஸ்மாக் உள்ளிட்டவைகள் ஒழிக்க வேண்டியுள்ளது. ஆனால் இந்து மதத்தை ஒழிப்போம் என்று குரல் கொடுத்திருப்பது, தங்களுக்கு வாக்களித்த இந்து மக்களுக்கு செய்யக்கூடிய துரோகம்.

இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக நாங்கள் பேசவில்லை, சநாதனத்தை தான் பேசி உள்ளோம் என்கிறார்கள். ஆனால் இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திராவிட கழக தலைவர் சநாதனம் வேறல்ல, இந்து மதம் வேறல்ல என்று பேசி இருப்பது, இரண்டும் ஒன்று தான்.இதை எப்படி மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

மேலும் இந்து கோயில்களுக்கு வரக்கூடிய வருமானம் எப்படி, இந்துக்களுக்காக பயன்படுத்துவார்கள்.கண்டிப்பாக பயன்படுத்த மாட்டார்கள்.இந்துக்களை ஒழிக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருக்கக்கூடியவர்கள் இந்த ஆட்சியிலே இருக்கக் கூடாது என்றார்.

சமாதனத்தை ஒழிப்பதன் மூலம் கலாசாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டுமல்ல, உதயநிதி மட்டுமல்ல எத்தனை பேர் பிறந்து வந்தாலும் இந்து மதத்தை அழிக்க முடியாது. இவர்கள்தான் அழிந்து போவார்கள்.மேலும் அளிக்கப்பட வேண்டிய சக்தி இவர்கள்தானே தவிர, இந்து மதம் கிடையாது.

இந்து மதத்திற்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய இவர்கள், நமது கலாச்சாரம் பண்பாடு வழிபாட்டு முறைகளை ஒழிக்க துடிக்கும் இவர்கள் விரைவில் தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்படுவார்கள்.

கண்டிப்பாக இந்த அமைச்சர்கள் பதிவு விலக வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் இந்த அமைச்சர்கள் பயணம் செய்யக்கூடிய ஒவ்வொரு இடத்திலும் பாஜக தொண்டர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவர்.

ஐஎன்டிஐஏ-வில் இருக்கக்கூடிய காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இந்து மதத்திற்கு எதிரான உதயநிதி ஸ்டாலின் கருத்திற்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதனத்திற்கு எதிரான ஒற்றைக் வார்த்தையால் இந்த கூட்டணி சுக்குநூறாக உடையும் என்றார்.

திமுக ஆட்சியில் இல்லையென்றாலும் பரவாயில்லை சனாதனத்திற்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம் என்று உதயநிதி பேசியதற்கு பதில் அளித்த அவர்,

திமுகவிற்கு மிகப்பெரிய தவறு செய்து விட்டோம் என்ற எண்ணம் வந்துவிட்டது. ஏனென்றால் இந்துக்களுக்கு எதிராக பேசி விட்டோம். நம்முடைய ஆட்சி கலைந்து விடும் என்ற பயம் அந்த அமைச்சருக்கு வந்து விட்டது. அதனால்தான் திமுக ஆட்சியை போனாலும் பரவாயில்லை என்று அமைச்சர் பேசி உள்ளார் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top