தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய, மக்கள் விரோத, தொழிலாளர் விரோத மோடி அரசு ஆட்சியை விட்டு வெளியேற வலியுறுத்தி தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த 47 பெண்கள் உள்ளிட்ட 160 பேர் கைதாகினார்.
ஒன்றிய மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்று பத்தாண்டு காலம் நடைபெற்று வருகின்ற நிலையில், 2014 -ஆம் ஆண்டு முதன் முதலாக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளான வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் வரவு வைக்கப்படும்.
அதேபோல உள்நாட்டு முதலாளிகளிடம் இருந்து கருப்பு மீட்டெடுக்கப்படும், ஊழல் ஒழிக்கப்படும், ஆண்டு தோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும், விலைவாசி கட்டுப்படுத்தப்படும், நாட்டில் சிறு தொழில்கள் அதிகரிக்கப்பட்டு, நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கப்படும் என்ற பிரதானமாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை.
விலைவாசி உயர்வு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உணவு பண்டங்கள் அரிசி, மளிகை,காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் விலை நாள்தோறும் அதிகரித்து வருகிறது, பெட்ரோல் டீசல் எரிவாயு விலைகளும் உயர்ந்துவிட்டது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படவில்லை, தொழிலாளர்கள் போராடி பெற்ற 44 தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழிற்சங்க சட்டங்கள் நான்காக சுருக்கப்பட்டு விரோத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,.
பாஜக ஆட்சி புரிகின்ற மாநிலங்கள் அனைத்தும் மத ஒற்றுமையை சீர்குலைத்தும், இஸ்லாமிய சிறுபான்மையினர் உள்ளிட்டோர் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குதலும், மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது ஊழல் மலிந்து நிறைந்துள்ளது.
பாரத் மாதா திட்டத்தில் துவாரகா விரைவுச் சாலைக்கு 18 கோடி ரூபாய் ஒரு கிலோ மீட்டருக்கு செலவு என்று திட்டமிட்டதை 250 கோடி ரூபாய் செலவுகள் காட்டி ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் ஆயுஷ்மான் திட்டத்தில் இறந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை பார்த்ததாக பல்லாயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது, ரபேல் விமான கொள்முதலில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சரகத்தில் முக்கிய கோப்புகள் திருடப்பட் டுள்ளது என்று மத்திய தணிக்கை குழு ஆய்வு அறிக்கை ஒன்றிய பாஜக அரசின் ஊழலை நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவில்லை, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வில்லை, எழுத்துரிமை, பேச்சுரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
பாஜக அரசை விமர்சித்த பிரபல எழுத்தாளர்கள் கௌரிலங்கேஷ், எம்.எம்.கல்புர்கி , கோவிந்த் பன்சாரே உள்ளிட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பிரபல கலைஞர். வர வர ராவ், ஆனந்த் டெம்டுல்டே, பெண் உரிமை போராளி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சுதாபரத்வாஜ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக மக்களுக்கு விரோதமான, தொழிலாளர் களுக்கு விரோதமான, விவசாயிகளுக்கு விரோதமான,நாட்டு வளர்ச்சிக்கு எதிரான ஒன்றிய மோடி அரசு ஆட்சியை விட்டு வெளியேறு என்ற கோரிக்கையை முழக்கத்தை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் தழுவிய போராட்டம் செப்டம்பர் 12,13,14 தேதிகளில் நடைபெறுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில் முத்து உத்தராபதி தலைமையில், தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் மாவட்ட பொருளாளர்ந.பாலசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சி.சந்திரகுமார், வீரமோகன், வெ.சேவையா, ம.விஜயலட்சுமி, டி.கண்ணகி ஆர் .கே.செல்வகுமார், ஆர்.ஆர்.ராமச்சந்திரன், மாநகர செயலாளர் ஆர்.பிரபாகர், துணைச் செயலாளர் ஆர் பி. முத்துக்குமரன்.
பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர்ஆர்.ஆர்.முகில், தஞ்சாவூர் ஒன்றிய துணைச் செயலாளர் ஜிராமலிங்கம், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் வாசு. இளையராஜா, பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மரு. பிரபாகரன் , மற்றும் நிர்வாகிகள். பேராசிரியர் பாஸ்கர்,தா.கிருஷ்ணன்.
தி.கோவிந்தராஜன், ஆசிரியர் சுந்தரமூர்த்தி, கே.கல்யாணி , ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை . மதிவாணன் மற்றும் 47 பெண்கள் உள்பட 160 பேர் கைது செய்யப்பட்டு அன்னை திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்