Close
செப்டம்பர் 20, 2024 1:26 காலை

வீடுதோறும் தண்ணீர் வழங்கும் திட்டம்: கே.ஏ. செங்கோட்டையன் தொடக்கம்

ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள பெரிய கொடிவேரி ஊராட்சியில் வீடு தோறும் தண்ணீர் வழங்கும் திட்டத்தினை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே. ஏ. செங்கோட்டையன் பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தார்

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள பெரிய கொடிவேரி ஊராட்சியில் ரூ. 63 லட்சம் மதிப்பில் வீடு தோறும் தண்ணீர் வழங்கும் திட்டத்தினை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே. ஏ. செங்கோட்டையன் பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தார்.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள பெரிய கொடிவேரி ஊராட்சிக்குட்பட்ட அக்கரை கொடிவேரி பகுதியில், 15 -ஆவது நிதிக்குழு மானிய நிதியிலிருந்து ரூ. 63 லட்சம் மதிப்பீட்டில் கொடிவேரி அணை அருகே கிணறு அமைத்து மின் மோட்டார்கள் மூலம் வீடு தோறும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கொடிவேரி அணையில் கிணறு அமைப்ப தற்கான பூமி பூஜை கொடிவேரியில் நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பின ருமான கே. ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு ரூ. 63 லட்சம் மதிப்பிலான குடிநீர் திட்டப்பணிகளை பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் அக்கரை கொடிவேரி பகுதியில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற உள்ளன.
இந்த நிகழ்ச்சியில்,யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன், நகரச் செயலாளர்  பிரினியோகணேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் நாகவேணி, எம்ஜிஆர் மன்றம் அருள் ராமச்சந்திரன் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top