Close
செப்டம்பர் 20, 2024 1:45 காலை

திமுக சார்பில் விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

ஈரோடு

விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உபகரணங்கள் வழங்கிய திமுக நிர்வாகிகள்

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பேரறிஞர் அண்ணா 115 -ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெருந்துறை அருகேயுள்ள  விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஈரோடு தெற்கு மாவட்ட மருத்துவ அணி மற்றும் பெருந்துறை சட்டமன்ற தொகுதி மருத்துவ அணி சார்பாக, ஈரோடு தெற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் விவேக், பெருந்துறை தொகுதி மருத்துவ அணி அமைப்பாளர்  நவீன்குமார் ஆகியோர்  முன்னிலையில், பெருந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

நிகழ்வில், பெருந்துறை தொகுதி மருத்துவ அணி துணை அமைப்பாளர்கள் பாலாஜி, தீனதயாளன், கௌதம், மாவட்ட சிறுபான்மை நல துணை அமைப்பாளர் லாரன்ஸ் மற்றும் கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top