Close
ஜூலை 8, 2024 1:33 மணி

வைகோ பிறந்தநாள்: புதுக்கோட்டையில் கேக் வெட்டி கொண்டாடிய மதிமுகவினர்

புதுக்கோட்டை

வைகோ பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புதுக்கோட்டை மாவட்ட மதிமுக நிர்வாகிகள்

புதுக்கோட்டையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் பொதுச்செயலர்   வைகோ    பிறந்த நாளை மதிமுக நிர்வாகிகள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
புதுக்கோட்டையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் தலைவர் மதிப்புக்குறிய  வை கோ வின்  80 -ஆவது பிறந்த தினத்தையொட்டி  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சியின் சார்பில் கட்சி அலுவலகத்தில் பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் கட்சியின்  மாவட்ட செயலாளர் எஸ் கலியமூர்த்தி வழங்கினார்.
மேலும் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அருகில் உள்ள நேசகரம்  முதியோர் மையத்தில் முதியோர்களுக்கு மதிய உணவுகளையும் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் எஸ். கலியமூர்த்தி வழங்கினார்.
புதுக்கோட்டை
முதியோருக்கு உணவு வழங்கிய மதிமுக மாவட்டச்செயலர் எஸ். கலியமூர்த்தி
நிகழ்வில் அரசியல் ஆலோசகர் வழக்கறிஞர் காசி சிற்றரசு, மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ராஜாஆதி மூலம் , நகரச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய  செயலாளர்கள் மறவப்பட்டி பாண்டியன்  ,வீரபத்திரன் பொதுக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன்,செல்வம்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடைபெற்ற வைகோ பிறந்த நாள் விழா
மாணவரணி மதிப்பிரபு இளைஞர் அணி  பாண்டியன்  மற்றும் உறுப்பினர் எஸ். கே. பழனிச்சாமி, வைகோசேகர்,  தலைமைச் செயற்குழு உறுப்பினர் சந்திரசுவாமி, மாவட்ட பிரதிநிதி பி ஆறுமுகம், செல்வராஜ், கருணாகரன்,  நகர்மன்ற உறுப்பினர் காசிலிங்கம், வட்டச் செயலாளர் ,வீரப்பன், முருகன்  மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top