வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திருச்சியில் போட்டியிட துரைவைகோவுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் (07.10.2023) எம்.ஏ. கிராண்ட் கூட்ட ஹாலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் கே.ஏ. ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கே.கலியமூர்த்திஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் காசிசிற்றரசு முன்னிலை வைத்தனர்.
2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைத்தல். இளைஞர் அணி மாணவர் அணி விவசாய அணி தொழிலாளர் அணி மகளிர் அணி தொண்டரணி அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.மாவட்ட அவைத்தலைவர் கே.ஏ. ஆரோக்கியசாமி பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதி மற்றும் கந்தர்வகோட்டை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் அனைத்திலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிப்பது. மதிமுக சார்பில் திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் நமது முதன்மைச் செயலாளர் துரை வைகோவை வேட்பாளராக அறிவிக்க பொதுச்செயலாளரை கேட்டுக் கொள்வது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதியிருந்தும் தனி நாடாளுமன்ற தொகுதியாக ஆக்காமல் பல்வேறு நாடாளுமன்ற தொகுதிகளில் பிரித்து 4 தொகுதிகளில் சேர்த்துள்ளதை மாற்றி புதுக்கோட்டையை தனி நாடாளுமன்ற தொகுதியாக தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.
அரசு சாதி வாரிகணக்கெடுப்பு நடத்தாமல் மக்களை ஏமாற்றி வெறும் 3% மட்டுமே மக்களை முன்னேற்றும் விதத்தில் செயல்படும் பாரதிய ஜனதா அரசு, உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் மருத்துவர் ரோகையா பங்கேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக மதிமுக கழகப் பொருளாளர் மு. செந்தில்அதிபன் பங்கேற்று, பூத் கமிட்டிக்கான படிவங்களை மதிமுக நிர்வாகிகளிடம் வழங்கினார்.
இதில், வி.கே.மதியழகன், அ.முத்தையா, ஆ.சுப்பையா செல்வராணி கணேசன், எஸ்.பி. ராஜா, எஸ்.சவரிநாதன், என் சந்திரசாமி, ஒன்றியச் செயலாளர் மறவபட்டி கே. பாண்டியன், ஜே. ஞானபிரகாசம்,சே வைரமூர் த்தி, எஸ்.பி. பிரபாகரன், கே.பி.சுரேஷ், வே.நமச்சிவா யம், வீரபுத்திரன், எஸ் முருகானந்தம், சேது கலையரசன், மு சண்முகநாதன்.சே. புகழேந்தி, சி கண்ணையா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர் குணசேகரன், தாவனா செல்வம், எஸ்.கே. பழனிச்சாமி, க.பாலகிருஷ்ணன், சி. பாலகிருஷ்ணன் ,கே. உமாபதி , கே. ஆனந்தன், ஆர். செல்வராஜ் ,கே. நடராஜ், ஜி. ஏழுமலை .
ஆர். செல்வகுமார் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ஆர். காசிலிங்கம், லதா கருணாநிதி, பேரூராட்சி செயலாளர்கள் கே.பி. செந்தில், ஏ. அலாவுதீன் ,முத்துதுரை, எஸ்.மாசிலாமணி, கோ.ச.கணேசன் உள்பட திரளான தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நகர செயலாளர் ஜி கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். நிறைவாக மாவட்ட கழக பொருளாளர் வழக்கறிஞர் எஸ். ராஜாஆதிமூலம் நன்றி கூறினார். மாவட்ட செயல் வீரர் கூட்டத்தினை மாவட்டச் செயலாளர் எஸ். கே. கலியமூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார்.