பொன்னேரியில் திமுக சார்பில் நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திமுக சார்பில் நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
உலகநாதன்.அரசுக்கல்லூரி அருகில் நடைபெற்ற நிகழ்வில், நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் தலைமை வகித்து கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார். இதில் மாவட்ட அமைப்பாளர் லோகேஷ், துணை அமைப்பாளர் முரளிதரன் முன்னிலை வகித்தனர்.
இதில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி கையெழுத்து இட்டு நீட் தேர்வுக்கு எதிராக வைக்கப்பட்டிருந்த பெட்டியில் அஞ்சல் அட்டை பூர்த்தி செய்து பெட்டியில் செலுத்தி. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வுக்கு எதிராக வைக்கப்பட்டிருந்த பேனரில் கையெழுத்திட்டனர். இதில் நகர்மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், இளைஞரணி, மாணவரணி மற்றும் மகளிரணி ஒரு லிட்டர் ஏராளமான கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.