Close
அக்டோபர் 5, 2024 6:55 மணி

நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை  மாவட்டம் முழுவதும் செங்கொடி ஏற்றி வீரவணக்கம்

புதுக்கோட்டை

நவம்பர் புரட்சி தினத்தை புதுகையில் கொடியேற்றி கொண்டாடிய சிபிஎம் கட்சி நிர்வாகிகள்

நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை  மாவட்டம் முழுவதும் செங்கொடி ஏற்றி கொண்டாட்டம்.

நவம்பர் புரட்சியின் 106 -ஆவது தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செங்கொடி ஏற்றியும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை கட்சி அலுவலகத்தில் கட்சியின் மூத்த தோழர் எம்.ஜியாவுதீன் கொடியேற்றினார். நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சலோமி, எஸ்.கலைச்செல்வன், மூத்த தோழர்கள் எம்.அசோகன்இ எம்.ஏ.ரகுமான், எம்.முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அறந்தாங்கியில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கொடியேற்றி அரசியல் விளக்கவுரை யாற்றினார்;. ஓன்றியச் செயலாளர் நாராயணமூத்தி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கராஜ், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.கர்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பொன்னமராவதி ஒன்றியம், காரையூரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் கொடியேற்றினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.சண்முகம்,  ஒன்றியச் செயலாளர் என்.பக்ருதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கம்பங்களில் புதிய செங்கொடி பறக்கவிடப்பட்டது.

நவம்பர் புரட்சி தினம் …1917-ஆம் ஆண்டு நவம்பர் 7 -ஆம் நாள் உலக வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும் நாள். முதன் முதலாக சுரண்டல் ஒழிக்கப்பட்டது. அந்த நாளில் தான். கஞ்சிக்கு வழியில்லாமல் வயிறு காய்ந்து கிடந்த உழைப்பா ளிகள் தன்மானத்துடன் நிமிர்ந்து நின்றது.

அந்த நாளில்தான். அன்றுதான் உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப் பட்டது. அன்று காலை முதல் பெத்ரோகி ராடு வீதிகளில் தொழிலாளர்கள் ஆயுதங்களுடன் அணி வகுக்கத் தொடங்கினர்.

அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், காவல் நிலையங் கள், வானொலி நிலையம் முதலியவை கைப்பற்றப்பட்டன. அரசின் தலைமையகமான கிரெம்ளின் மாளிகை இறுதியாக வீழ்ந்தது. முதலாளிகள் அலறி அடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினர். இப்படியாக உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது.

ரஷியா சோசலிச நாடு என அறிவிக்கப்பட்டது. லெனின் அதனுடைய அரசு தலைவரானார்.ஆட்சியில் அமர்ந்த அடுத்த கணமே அனைத்து நாடுகளுடனும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வதாக லெனின் அறிவித்தார். போரினால் நீண்ட காலமாக அமைதி இழந்திருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர். ரசியாவின் அனைத்து நிலங்களும், வளங்களும் தேசிய உடைமை ஆக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டி ருந்த பண்ணையார்களின் நிலங்கள் ஏழை உழவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டன. உழவர்களின் வறுமை இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.உழைப்பாளி மக்கள் அரசு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர்.

சோவியத்துகள் என்ற உழைக்கும் மக்கள் மன்றங்கள் அரசு நிர்வாகத்தை நடத்தின. ஒரு ஊரின் உழைக்கும் மக்கள் அனைவரும் அந்த ஊர் சோவியத்தின் உறுப்பினர்கள். அவர்கள் மாதம் ஒரு முறை கூடி ஊருக்குத் தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் தீட்டுவார்கள். அதை அமல்படுத்த ஒரு நிர்வாகக் குழுவும் தேர்ந்தெடுக்கப்படும்.

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கடுமையாக வேலை செய்து அந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.சரியாக ஒரு மாதம் கழித்து மீண்டும் சோவியத்தின் கூட்டம் நடைபெறும். அதில் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் வேலைகள் பரிசீலிக் கப்படும். திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், ஊழல் புகார் எழுந்தாலும் அவர்கள் பதவி நீக்கம் செய்யப் படுவார்கள்.

அதுமட்டுமல்ல நீதிமன்றங்களாக செயல்படும் அதிகாரமும் சோவியத்துகளுக்கு இருந்தது.மக்களே சட்டங்களை இயற்றி, மக்களே அவற்றை அமல்படுத்தி, மக்களே நீதி வழங்கும் ஆட்சி முறைதான் சோவியத் ஆட்சிமுறை. லெனினால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி முறைதான் உண்மையான, ஜனநாயகம். இதில் மக்களே சர்வ அதிகாரம் படைத்தவர் களாக மாறினர்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top