Close
மே 21, 2025 3:58 மணி

கோபி அருகே வடக்கு மாவட்ட திமுக சார்பில் 1500 குடும்பங்களுக்கு பரிசுப்பொருள்கள் வழங்கல்

ஈரோடு

கோபி அருகே நடைபெற்ற விழாவில் பரிசளிக்கிறார், முன்னாள் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜானகி கோபால்

கோபி அருகே உள்ள செங்கோட்டையன் நகரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 1,500 குடும்பங்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த முன்னாள் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜானகி கோபால் தலைமை வகித்தார்.

‘இதில் கோபி, சத்தியமங்கலம், நம்பியூர், பவானி, அந்தியூர், குள்ளம்பாளையம் செங்கோட்டையன் நகர், புஞ்சை புளியம்பட்டி டி.என்.பாளையம், அத்தாணி, அந்தியூர், கே.என்.பாளையம், பவானி ஆகிய பகுதிகளில் உள்ள 1,500 குடும்பத்தினருக்கு ரூ.500 மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டது.

ஈரோடு
கோபி அருகே செங்கோட்டையன் நகரில் திமுக சார்பில் நடந்த பரிசளிப்பு விழா

நிகழ்ச்சியில், நிர்வாகி சரத், தன்னார்வலர் வெற்றி, கவுன்சி லர் குமார சீனிவாசன், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப் பாளர் மூணாம்பள்ளி வெங்கடேஷ், முன்னாள் மாணவர் அணி துணை அமைப்பாளர் பிரபு, கோபி பிரபு, ஜான்பாஷா, தனபால், ராஜேந்திரன், தென்றல் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி கே.என்.பாளையம் பழனிச்சாமி, சின்னசாமி, செங்கோட்டையன் நகர் கௌரி, செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top