பட்டியலின மாணவி மீது தாக்குதல் நடத்திய பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மகன், மருமகள் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து கோபி திருப்பூர் சாலையில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நகர செயலாளர் கணேஷ், எம்ஜிஆர் மன்றம் அருள் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.