Close
ஜூலை 4, 2024 4:39 மணி

எண்ணூரில் அதிமுக சார்பில் 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

சென்னை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளையொட்டி  அதிமுகசார்பில்  2,000 பேருக்கு எண்ணூரில் திங்கள்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் 76-வது பிறந்தநாளை யொட்டி எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன் தலைமையில் 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் அதிமுக அமைப்பு செயலாளர் ராயபுரம் ஆர்.மனோ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது மனோ பேசியதாவது: மீனவர்கள் வாழ்க்கையில் சிரமங்கள் குறித்து  திரைப் பட பாடல் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர். உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையிலும் தங்களது தொழிலை தொடர்ந்து மேற் கொண்டு வருவதால்தான் மீனவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அதிமுக ஆட்சியில் கொண்டவரப்பட்டன.  ஆனால் தற்போது  மீனவர்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே மீண்டும் அதிமுக ஆட்சியில் அமர்ந்திட மீனவர்கள் ஆதரவு அளித்திட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் பேசியதாவது:

திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் மீனவர்களின் வாழ்க்கைத் தரம் உயர பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டன.  எண்ணூரில் ரூ. 86 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வந்தது அதிமுகதான்.
எண்ணூர் நெட்டுக்குப்பம் முதல் சின்னகுப்பம் வரை கடல் அரிப்பை தடுக்க பாறாங்கற்களால் ஆன தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டது.  அரசு. வட சென்னை அனல் மின்சாரம் தயாரிப்பின் போது முகத்து வாரம் பகுதியில் சுடுநீர் விடப்பட்டதால் மீன்வளம் பாதிக்கப்பட்டது.

அப்போது இப்பகுதி மீனவர்கள் பெரும்பாலானோருக்கு மின்சார வாரியத்தில் நிரந்தர வேலையை அளித்தது அதிமுக ஆட்சிதான். தற்போது இப்பகுதியில் மீன்வளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  எண்ணூர் காமராஜர் துறைமுகம் மூலம் நிரந்தர வேலை வாய்ப்புகளை பெற்றுத் தர திமுக அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அமோனியா வாயுக் கசிவைத் தடுக்க போதிய முயற்சிகளை தனியார் தொழிற்சாலை எடுக்கவில்லை. அரசும் கண்டு கொள்ளவில்லை என்றார் குப்பன்.

கூட் டத்தில் மாமன்றஉறுப்பினர் டாக்டர் கே கார்த்திக், அதிமுக நிர்வாகிகள்  வேலாயுதம்,  சச்சிதானந்தம்,  எம்.டி. சேகர், புதுகை பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top