Close
நவம்பர் 22, 2024 12:07 காலை

திமுக கூட்டணியில்  கொமதேவுக்கு நாமக்கல்  தொகுதி ஒதுக்கீடு:உற்சாகத்தில் தொண்டர்கள்

Kmdk Contest In Namakkal

லோக்சபா தேர்தலானது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடக்க உள்ளது.இதற்கான தேதி அறிவிப்பை விரைவில்  தேர்தல் கமிஷன் அறிவிக்க உள்ளது.

தேர்தல் தேதியை அறிவிக்காவிட்டாலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள கட்சிகள் அப்போதிருந்தே வேலையைத்  துவக்கி விட்டனர்.

தமிழகத்தினைப் பொறுத்தவரை கடந்த 2019 ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்திலுள்ள  39  லோக்சபா தொகுதிகளில்  38 தொகுதியை திமுக கூட்டணி வென்றது. ஒரே ஒரு தொகுதி அது தேனி லோக்சபா தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரன் மட்டுமே அதிமுக சார்பில் வெற்றி பெற்றார்.

தற்போது தமிழகத்தினைப் பொறுத்தவரை  திமுக கூட்டணியே வலு மிகுந்ததாக உள்ளது. அதிமுகவும் பாஜவும் கருத்து வேற்றுமையின் காரணமாக கூட்டணி சேரவில்லை. இருந்த போதிலும் பின்னால்  அதிமுக சேர வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது. ஆனால் அதன் பொதுச்செயலாளர் இபிஎஸ் இனியும்  எந்த கட்சியுடன் கூட்டணி இல்லை எனவும், அதிமுக தலைமையில்  வெற்றிக்கூட்டணி விரைவில் அமைக்க  உள்ளதாகவும்  அதன் நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

 

2024 லோக்சபா தேர்தலுக்கான திமுக கூட்டணியில் கொமதேக வுக்கு ஒரு தொகுதிக்கான உத்தரவினை வழங்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

இந்நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பல நாட்களுக்கு முன்பாக இருந்தே தொகுதிப்பங்கீடு குறித்த  பேச்சுவார்த்தையானது முதல் கட்டம், இரண்டாம் கட்டம் என நடந்து வருகிறது. சொல்லப்போனால் திமுக கூட்டணியே வலுவாக உள்ளதாகவும்  பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

நாமக்கல் –கொமதேக போட்டி

நாமக்கல் லோக்சபா தொகுதியினை கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியான  கொமதேவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. கடந்த தேர்தலிலும் இக்கட்சிக்கு இதே  தொகுதியைத்தான்  திமுக கூட்டணி அளித்தது. அதனைவைத்து  இந்த முறையும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் நாமக்கல் தொகுதியில்  திமுக கூட்டணி  கொமதேக வேட்பாளராக சின்ராஜ் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக காளியப்பன் மூன்றரை லட்சம்  வாக்குகள் பெற்றிருந்தார்.

இதற்கு முந்தைய எம்.பியான சின்ராஜ் தொகுதி மக்களிடம் அன்புடன் பழகி அவர்களுக்கான வேலையினை எந்தவித கையூட்டும் இல்லாமல் மக்களுக்கு தேவையான வசதிகளைச்  செய்து கொடுத்தார். அவருடைய  நேர்மை  நாமக்கல் தொகுதிகளில் உலா வந்து கொண்டிருப்பதால் கொமதேக சார்பில் யார் நின்றாலும் வெற்றி என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில்   சேந்தமங்கலம், நாமக்கல், ராசிபுரம் ஆகிய  சட்டசபை தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று  எம்எல்ஏக்களாக உள்ளனர். இந்நிலையில் இந்த முறையாவது நாமக்கல் லோக்சபா தொகுதி நம்மிடமே விட்டுவிடுவார்கள் என திமுக  எண்ணிய நிலையில்  தற்போது நாமக்கல் தொகுதியினை கட்சித்தலைமை கொடுத்திருப்பது திமுகவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top