Close
அக்டோபர் 5, 2024 5:57 மணி

மத்திய அரசைக்கண்டித்து திருமயம் அருகே காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராம.சுப்புராம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்களை பாதுகாக்க வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சி .சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே  நமணசமுத்திரத்தில் நடைபெற்ற கண்டன  ஆர்ப்பாட்டத்துக்கு திருமயம் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராம.சுப்புராம் தலைமை வகித்தார்.

புதுக்கோட்டை
நமணசமுத்திரத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்தும்,தமிழக மீனவர்களை பாதுகாக்க வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கருப்புக்கொடியுடன், பிரதமர் மோடியின் உருவப்படத்துடன் கோ பேக் மோடி என்ற பதாகையையும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற ஆர்ப்பாட்டத்தில்   தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்து அவர்களது படகுகளை பறிமுதல்செய்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை அரசை, பிரதமர் மோடி எச்சரித்து மீனவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும், விஷம் போல ஏறிவரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டுமென  வலியுறுத்தியும் பங்கேற்ற வர்கள் முழக்கமிட்டனர்.

புதுக்கோட்டை
நமணசமுத்திரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸார்

மீனவரணி மாவட்டத்தலைவர் பஞ்சவர்ணம், மாநில பொதுக்குழு உறுப்பினர் முகமது இப்ராகிம், மாநில சிறுபான்மைப்பிரிவு அக்பர்அலி, மாவட்ட நிர்வாகிகள் காமராஜ், மாவட்ட மகளிரணி சிவந்திநடராஜன், ஆலங்குடி மணிகண்டன், முன்னாள் தலைவர் அழகு ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் கணேஷ்பிரபு மற்றும் பலர் பேசினர்.

வட்டாரத்தலைவர்கள் தனராஜ், அய்யப்பன், மணிகண்டன், முருகேசன், அர்ஜுனன், கணேசன், மாநில எஸ்சி,எஸ்டி பிரிவு கண்ணன்,பெருமாள், மயில்வாகணன், முருகானந்தம், முன்னாள் சேர்மன் ஜெயலட்சுமி, அங்குளவன், மெய்யப்பன், சத்யராஜ், பூங்குன்றன்.

பொதுக்குழு உறுப்பினர் பொறியாளர் பழனியப்பன், நகரத் தலைவர் அன்பழகன், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மகாலட்சுமி, ராஜகுமாரி, தவமணி, ராஜேஸ்வரி,  நிர்வாகிகள் நாகப்பன், பார்த்தசாரதி, பாண்டியன், அழகப்பன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். அரிமளம் ஒன்றிய நிர்வாகி மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை அரிமளம் நிர்வாகிகள் இப்ராகிம், அர்ஜுணன், கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top