Close
அக்டோபர் 5, 2024 7:21 மணி

பாஜவின் முதல்  195 வேட்பாளர் பட்டியல் வெளியீடு : 34 பாஜ எம்.பிக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு

Bjp Candidate First List

இந்தியாவின் லோக்சபா காலம் வரும் மே மாதத்தோடு முடிவயைடய உள்ளதால் ஏப்ரல் அல்லது மே மாதத்தில்  கட்டாயம்  பொதுத்தேர்தலை நடத்தியாக வேண்டும் இதற்கான  தேர்தல் தேதி இந்த வாரமோ அல்லது அடுத்த வாரமோ  தேர்தல் கமிஷன் அறிவிக்க உள்ளது.

தேர்தல் அறிவிப்பே இன்னும் வெளியாகாத நிலையில்    பாஜ தன்னுடைய  195 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை  அறிவித்துள்ளது பெரும் பரபரப்பான செய்தியாக பார்க்கப்படுகிறது அரசியல் வட்டாரத்தில்.

Bjp Candidate First List

 

தமிழகத்தில் இன்னும் கூட்டணியா? தனியாக போட்டியா ? என்று முடிவெடுக்காத நிலையில் திடீரென  195 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜ வெளியிட்டு அதிரடிகாட்டியுள்ளது. தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி கடந்த தேர்தலில்  போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய  வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார்.

கடந்த 2019 ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலைப்பொறுத்தவரை தேர்தல் தேதி அறிவித்த 11 நாட்களுக்குபின்னர்தான்  பாஜ தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

பாஜவின் உறுதியான தலைமை கொண்ட  கட்டுப்பாடான கட்சி என்ற தோற்றத்துக்கு வலுவூட்டவும்,  அதற்கு நேர் மாறாக எதிர்க்கட்சிகளுக்கு ஒரு அசச்த்தை ஏற்படுத்தும் வகையிலும் பாஜ முன்னதாகவே இந்த வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளதாக பேசப்படுகிறது.

நரேந்திரமோடி  உ.பியில் உள்ள வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக களம் இறங்குகிறார். மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உட்பட 34 அமைச்சர்களின் பெயர்களும் இந்த முதலில் வெளியிடப்பட்ட  பாஜ வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு முன்னாள் முதல்வர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

பாஜ வெளியிட்டுள்ள முதல் வேட்பாளர் பட்டியலில்  50 வயதுக்கும் குறைவானர்கள்  47 பேர்,  இதில்  28 பேர் பெண்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், 27 பேர் பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவர்கள் 18 பேர் ஓபிசி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்  57 பேர்.

Bjp Candidate First List

மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்ற நிலையில்  28 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கணக்குப்படி பார்த்தால் இதில்  15 சதவீதம் கூட இல்லை. பின்னர்  வெளியிடப்படும் பாஜ வேட்பாளர்கள் பட்டியலில் அதிக பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடியின்  அதிரடி பிரச்சாரம்

வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாகவே பிரதமர்  நரேந்திரமோடி  பிரச்சார பயணத்தை துவங்கிவிட்டதுதான் ஹைலைட்டான விஷயமே. எப்படியும் மூன்றாவது முறை ஆட்சி அமைத்தாக வேண்டும் என்பதே அவர் கனவு.இதற்காக நான்கைந்து மாநிலங்களுக்கு சென்று பிரச்சாரக்கூட்டத்திலும் பேசிவிட்டார். இன்று தமிழகம் வருகிறார். அடுத்த கட்டமாக டோர் கேன்வாஸ் செய்ய பாஜ திட்டமிடப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று பாஜவின் துண்டு பிரச்சாரத்தை வழங்கி வாக்கு சேகரிப்பதுதான் அந்த  திட்டம். பாஜ தனித்து  370 தொகுதிகளையும் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து  400 என்ற மிகப்பெரிய இலக்கினை எப்படியாவது இந்த முறை பெற்றுவிட வேண்டும் என்ற உயரிய திட்டத்தோடு பாஜ தேர்தல் பணியாற்றி வருகிறது

இந்த வேட்பாளர்கள் பட்டியலை தேர்வு செய்ய விடிய விடிய நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான் இது. இந்த கூட்டத்தில்  பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங், அமித்ஷா, நட்டா ,அனைத்து பாஜ முதல்வர்கள்  மற்றும் மூத்த நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

தமிழகம் பென்டிங்

முதல் பட்டியலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. தமிழகத்தில் பாஜ கூட்டணியில் அதிமுகவை  சேர்க்கும் முயற்சியானது நடந்து வருகிறது. அப்படி அமையும் பட்சத்தில்  தமிழகத்தில் கூட்டணிக்கு  அதிமுகதான் தலைமை வகிக்கும். தொகுதி பங்கீடு முடிவடைந்தால்தான் அதற்கு ஏற்ப வேட்பாளர்கள்  அறிவிக்கப்படும். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு முடிவடையாததால்தான்  தமிழகத்தில் பாஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சி மேலிடமானது அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top