Close
செப்டம்பர் 18, 2024 3:36 காலை

கோவை தொழில்அதிபர்களை அவமரியாதை செய்யும் பாஜக: இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி கண்டனம்

தமிழ்நாடு

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி வெங்கடேச மோகன்

கோவை தொழில்அதிபர்களை அவமரியாதை செய்யும் பாஜக: தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி கண்டனம்

கோவை: கோவையில் குறைகளை கேட்கிறோம் என தொழில் அதிபர்களை அழைத்து அவர்களை அவமானப்படுத்திய பாஜகவுக்கு, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி வெங்கடேச மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கோவையில் தொழில் அதிபர்களின் குறைகளை கேட்க பாஜக அண்மையில் அழைத்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கோவையின் முக்கிய தொழில்அதிபர்கள் பலரும் பங்கேற்றனர்.

அதில் அனைவருக்கும் பரிட்சையமான அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் பங்கேற்று தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவர் பேசிய விவகாரம் சமூகஊடகங்களில் வைரலான நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், அவர் நேரில் சந்தித்து பேசினார்.

இந்நிலையில், கோவையின் பெருமையாக திகழும் அன்னப்பூர்ணாவின் உரிமையாளரை, அவருக்கு தெரியாமல், அவர் மன்னிப்பு கேட்பது போன்ற காட்சியை பாஜக நிர்வாகிகள் வெளியிட்டது மலிவான அரசியலை பாஜகவினர் திட்டமிட்டு செய்வதையே காட்டுகிறது.

இதன் மூலம் பல தொழில்களின் தலைநகரமாக திகழும் கோவை மாவட்டமும், அதன் தொழில்முனைவோர்களும் சுதந்திரமான கருத்தை ஆளும் ஒன்றிய அரசிடம் சொன்னால் இவ்வாறு சங்கடத்துக்கு உண்டாக்கப்படுவர் என்ற கருத்தை இது வெளிப்படுத்துகிறது.

ஆளும் பாஜக அரசின் இந்த போக்கு தொழில்முனைவோர்களின் கருத்து சுதந்திரத்துக்கு முற்றிலும் எதிராக அமைந்துள்ளது.மக்களின் குறைகளுக்கு செவிசாய்த்து அரசு செயல்பட வேண்டும் என்பதே உண்மை.

அதிலும் குறிப்பாக, மக்களின் பிரதியான இருக்கும் பாஜகவின் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ. வானதி சீனிவாசன் இந்த விஷயத்தை கையாண்ட முறை மக்களை முகம் சுழிக்கவைக்கிறது. இது கண்டனத்துக்குரியது. இந்த நிகழ்வு கோவை மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

தொழில்அதிபர் அன்னப்பூர்ணா சீனிவாசனின் தந்தை தாமோதரசாமி நாயுடு கோவைக்கு ஆற்றிய பணிகளும், சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டதும் வரலாறு. வெளிநாட்டில் வசிப்பவர் கள்கூட, கோவை அன்னபூர்ணாவை தேடி, படையெடுக்க காரணம், காலம் கடந்தும் அவர்கள் தவறாமல் பார்த்துக்கொண்ட அந்த தரம். தலைமுறை தாண்டியும் அன்னபூர்ணாவுக்கு பெயராகி போனது என்பது தான் உண்மை எனத் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top