Close
செப்டம்பர் 24, 2024 12:31 மணி

வரலாற்றைப் படிக்காமல் வரலாறு படைக்க முடியாது: சீமான்

சிவகங்கை

சிவகங்கையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

சிவகங்கை:  வரலாற்றைப் படிக்காமல் வரலாறு படைக்க முடியாது என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சிவகங்கை சிவன்கோயில் அருகே  அக்கட்சியின் சார்பில் நேற்று  நடைபெற்ற வரலாறு நம்மை வழிநடத்தும் என்ற முழக்கத்தை முன்வைத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவர் பேசியதாவது:

பழம் பெருமை பீற்றிக்கொள்ள அல்ல நம்மை தீட்டிக் கொள்வதற்கானது. அதில் வரலாறு என்பது நம் தேசிய இனத்தில் வழித்தடம்.  வரலாற்றை  தெளிவு பெறாத எந்த இனமும் எழுர்ச்சி பெறாது. கடந்த காலத்தை கைகாட்டும் ஏடு அல்ல வரலாறு. அது நமக்கான அடையாளம்.  எங்கு வாழ்வோம், எங்கு வீழ்வோம் என்பதைக் கற்றுக் கொள்ள உதவி செய்வது வரலாறு மட்டும்தான்.

நம் முன்னோர்கள் கட்டமைத்த வரலாறு வேறு. இன்று கட்டமைக்க வேண்டிய கடமை வேறு.  மூவேந்தர்கள் செய்த தவறு என்ன என்றால் சகோதர யுத்தம்தான். சொந்த ரத்தங்களுக்கு சண்டையிட்டு மடிந்த தால்தான் அவர்களது வாரிசுகளுக்கு இந்த மண்ணில் நிற்க இடமில் லாமல் போனது.

தமிழர் வரலாறு  நூறாண்டுகளாக  திராவிட வரலாறு என திரிக்கப்பட்டது. 500 ஆண்டுகளில் தோன்றிய மொழி 5 ஆயிரம் ஆண்டு கால மொழியை அழிக்க நினைப்பதை  எப்படி சகிக்க முடியும். அற்ப சாதிப்பற்றால் மொழிப்பற்றை மறந்துவிட்டோம். உன் வரலாற்றை நீ படித்தால்தான் தலை நிமிர்ந்து நிற்க முடியும். வஉசியை விட பெரிய தியாகம் செய்தவர் இந்தியாவில் யார் இருக்கிறார்கள். அவரது தியாக வரலாறு மறைக்கப் பட்டது. இது போல ஒன்றல்ல ஓராயிரம் வரலாறுகள் மறைக்கப்பட்டுள் ளன.எனவே, வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் ஒரு நாள் அவர்களே எழுவார்கள். வரலாறுதான் வழிகாட்டும் என்றார் சீமான்.

முன்னதாக அரண்மனை வாயில் உள்ள  வேலுநாச்சியார் சிலைக்கு சீமான் மாலையணிவித்து மரியாதை செய்தார். இதையடுத்து  பறையிசையும், இயக்குனர்  யுவராஜ் குழுவினரின் ஜம்புத்தீவுப் பிரகடனம் மேடை நாடகமும் நடைபெற்றன. இதில், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top