சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூர் கிராமத்தில் பத்மபூஷண் கேப்டன் விஜயகாந்த் -ன் 72 -ஆவது பிறந்தநாள் விழா மற்றும் தேமுதிக கட்சியின் 20 -ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இதை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் மற்றும் அன்னதான நிகழ்வுக்கு தேமுதிக செயற்குழு உறுப்பினர் தனசேகரன் மற்றும் மாவட்டச் செயலாளர் திருவேங்கடம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தேமுதிக உயர்மட்ட குழு உறுப்பினர் ஜாகிர்உசேன் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் ரேக்ளா பந்தயத்தை தொடக்கி வைத்தனர்.