Close
நவம்பர் 15, 2024 1:49 காலை

 அமெரிக்க தேர்தல் முறை: சில குறிப்புகள்.. உங்கள் பார்வைக்கு..

அமெரிக்க தேர்தல்

அமெரிக்க தேர்தல் முறை

அமெரிக்காவில் ஒருவர் அதிபராவதற்கு அவர் முதலில் அமெரிக்க குடிமகனாக இருக்கவேண்டும். இந்தியாவுடன் ஒப்பிடும் போது அமெரிக்கத் தேர்தல் முறை சற்று மாறுபட்டது. முதலில் கட்சியின் சார்பில், யார் நிற்பது என்பதை தீர்மானிக்க, முதலில் கட்சிக்குள்ளேயே தேர்தல் நடக்கும் இதை ‘ப்ரைமரி’ என்பார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திலும், கட்சியின் உறுப்பினர்கள் கூடி வாக்களித் ததன் அடிப்படையில், எந்த வேட்பாளருக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதோ, அவரே கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். இறுதியில் அவரே, தன்னுடன் துணை அதிபர் பதவிக்கு யார் வரவேண்டும் என்பதை தீர்மானிப்பார்.

அதிபர் மற்றும் செனட், காங்கிரஸ் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பதையும் காண்போம்
அமெரிக்காவில் மொத்தம், 50 மாகாணங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு மாகாணத்திலும் ‘எலெக்டர்கள்’ எண்ணிக்கை மாறுபடும். அமெரிக்கா வில் மக்கள் வாக்குகளைவிட, மாகாணங்களில் பெறப்படும் எலெக்டர் களின் எண்ணிக்கையே முக்கியமானது.

பெரிய மாகாணங்களான ப்ளோரிடா, கலிபோர்னியா, டெக்ஸாஸ் போன்றவற்றில், எண்ணிக்கை அதிகம். ஐயோவா உள்ளிட்ட சில சிறிய மாகாணங்களில், உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவு. இந்த உறுப்பினர்களைக் கொண்டவர்களின் அமைப்புதான், தேர்தல் அவை அதாவது எலெக்டோரல் காலேஜ் என்று அழைக்கப்படுகிறது.

அமெரிக்காவில் மொத்தம் 538 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 இடங்களை ஒரு வேட்பாளர் பெற்றாலே, அவர் அதிபர் பதவிக்கு தகுதி பெறுவார். அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள், இந்த எலெக்டர்களின் வாக்குகளைப் பெற்றுத்தான் பதவியைப் பிடிக்க வேண்டும்.
எலெக்டர்கள் வாக்கு எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்று பார்ப்போம்
எலெக்டர்கள் மக்கள் வாக்கின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு மாநிலத்தில் அதிபர் வேட்பாளர், பெரும்பாலான மக்கள் வாக்குகளைப் பெற்றால், அந்த மாநிலத்தின் மொத்த எலெக்டர்களின் வாக்குமே, அந்த வேட்பாளருக்கே போய்விடும். பொதுத் தேர்தல் முடிவடைந்தவுடனேயே, இரு அதிபர் வேட்பாளர்களில் யாருக்கு அதிக எலெக்டர்கள் கிடைத்திருக்கிறார்களோ, அவரே அடுத்த கட்டத்தில் அதிபராவார். அடுத்து எலெக்டர்கள் கூடி, நிஜ தேர்தலை நடத்துவார்கள்.

2016 -ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் வாக்குகளில் ஹிலாரிக்கு 48.0 சதவிகிதமும், டிரம்ப்புக்கு 45.9 சதவிகிதமும் கிடைத்தன. அதிக எலெக்டர்கள் உள்ள மாநிலங்கள், டிரம்ப்புக்கு கிட்டியதால், அவர் அதிபரானார். அதிகமான மக்கள் வாக்கைப் பெற்றாலும் 2016 -ஆம் ஆண்டு ஹிலாரியால் அதிபர் பதவியை அடைய முடியவில்லை.

தற்போதைய 2024 தேர்தலிலும் கூட கமலா ஹாரிஸை தோற்கடிக்க டொனால்ட் டிரம்ப்க்கு, பெரும்பான்மையான அதிக எலெக்டர்கள் உள்ள மாநிலங்கள் தான் உதவின.

#இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top