Close
நவம்பர் 18, 2024 1:27 மணி

காஞ்சிபுரத்தில் பேரணியுடன் தமிழர் விடுதலைக் கட்சியின் முப்பெரும் விழா

காஞ்சிபுரத்தில் தமிழர் விடுதலைக் கட்சியின் முப்பெரும் விழாவில் பேரணி நடத்தப்பட்டது.

தமிழர் விடுதலைக் கட்சி சார்பில் முப்பெரும் விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

வ.உ.சி யின் 88 ஆம் ஆண்டு நினைவு நாள்,  தமிழர் விடுதலைக் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க நாள் மற்றும் தமிழ் பெயர் பலகை விழிப்புணர்வு பேரணி என முப்பெரும் விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

தமிழர் விடுதலைக் கட்சியின் மாநில தலைவர் யாளி மேகநாதன் தலைமையில்,  அக்கட்சியினர் கங்கைகொண்டான் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மேற்கு ராஜவீதி , அன்னை இந்திரா காந்தி சாலை, பேருந்து நிலையம், காமராஜர் தெரு , மூங்கில் மண்டபம், காந்தி சாலை வழியாக தேரடி வரை தமிழ் பெயர் பலகை விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இப்பேரணியில் தமிழ் பெயர் பலகைகளை வணிக நிறுவனங்கள் வைக்க வேண்டும் எனவும் , தமிழில் 30 விழுக்காடும் , ஆங்கிலத்தில் முப்பது விழுக்காடும் , பிற மொழிகளில் 20 வழக்காடு என அரசு கூறிய விதிகளை பின்பற்ன கூறி முழக்கங்கள் இட்டவாறு சென்றனர்.

மேலும் தமிழர் என்று அடையாளத்தை,  முகவரியை தருகிற தமிழ் தற்போது சிதைக்கப்படுவதாகவும்,  தமிழ் மண்ணில் வணிகம் செய்து வரும் வணிகர்கள் மொழியை காக்க தங்கள் கடமையை செய்தே ஆக வேண்டும் எனக் கூறி வியாபாரிகளுக்கு தமிழ் பெயர்களை கொண்ட கையேடுகளை வழி நெடுகிலும் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து தேரடியில் தமிழர் விடுதலைக் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழில் விடுதலைக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top