Close
ஏப்ரல் 2, 2025 12:01 மணி

எல்ஐசி வலைத்தள முகப்பு பகுதி இந்தியில் மாற்றப்பட்டதற்கு திருமாவளவன் கண்டனம்

கட்சி பிரமுகரின் இல்லத்தை திறந்து வைத்த தொல் திருமாவளவன்.

எல்ஐசி முகப்பு வலைத்தள பகுதி இந்தியில் மொழி மாற்றம் செய்துள்ளதை மீண்டும் ஆங்கிலம் மொழிக்கு மாற்ற வேண்டும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல் என விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் காஞ்சிபுரத்தில் பேட்டியளித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பு சார தொழிலாளர் விடுதலை முன்னணி நிர்வாகி விமல்ராஜ் இல்ல புதுமனை புகு விழாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வருகை புரிந்து , புதுமனை புகுவிழா கண்ட நிர்வாகி குடும்பத்தினரை வாழ்த்தினார்.

  • இதனை தொடர்ந்து திருமாவளவன்  செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி யின் வலைதள முகப்பு பகுதியை ஆங்கில மொழியில் இருந்து இன்று இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் கண்டனத்துக்குரிய செயல் எனவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது என தெரிவித்தார்.

ஆரம்ப முதலே பாஜக இது போன்ற சேட்டைகளை செய்து வருவதாகவும், நாடாளுமன்றத்தின் முதல் நாளிலேயே உறுப்பினர்களுக்கு அளிக்கும் சுற்றறிக்கையில் இந்தி இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனை கடுமையாக கண்டித்ததால் மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டது.

இனி அனைத்து மொழிப் பயனாளர்களும் பயன்பெறும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும் எனவும், ஒருகாலும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top