Close
நவம்பர் 25, 2024 7:00 காலை

மு க ஸ்டாலினை திருப்தி படுத்தும் நிலையில் திருமாவளவன் : தமிழிசை சௌந்தரராஜன் கருத்து..!

சங்கரன்கோவிலில் வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் சார்பாக பட்டதாரி இல்லத்தரசிகளுக்கான இலவச வேலைவாய்ப்பு பயிற்சியை தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

மு.க. ஸ்டாலினை திருப்தி படுத்த வேண்டிய நிலையில் திருமாவளவன் உள்ளார் என்றும் அதனால்தான் அம்பேத்கருடைய புத்தக வெளியீட்டு விழாவை கூட திருமாவளவன் தவிர்க்கிறார் எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் சார்பாக பட்டதாரி இல்லத்தரசிகளுக்கான இலவச வேலைவாய்ப்பு பயிற்சி நடைபெற்றது. இதனை முன்னாள் கவர்னரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

இதில் சோகோ நிறுவனத்தில் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வாய்ஸ் ஆப் தமிழ்நாடு அறக்கட்டளையின் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இல்லத்தரசிகள் பங்கேற்று பயன் அடைந்தார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஊடகவியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழிசை சவுந்தரரான் கூறியதாவது:

மு.க. ஸ்டாலினை திருப்தி படுத்த வேண்டிய நிலையில் திருமாவளவன் உள்ளார். அதனால்தான் அம்பேத்கருடைய புத்தக வெளியீட்டு விழாவை கூட திருமாவளவன் தவிர்க்கிறார்.

அம்பேத்கர் வழியில் வருவதாக சொல்லும் அவர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதால் அதனை திருமாவளவன் தவிர்க்கிறார். அத்தகைய திருமாவளவன் பாஜகவுக்கு எதிராக பேசி மு. க. ஸ்டாலினை திருப்தி படுத்தக்கூடிய நிலையில் உள்ளார்.

தொண்டர்களின் கடுமையான உழைப்பு மக்களின் ஆதரவால் மகாராஷ்டிரா மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் பெற்ற வெற்றி நாடு முழுவதும் பெற்ற வெற்றிக்கு சமமாகும் ஏனென்றால் மகாராஷ்டிராவில் அனைத்து பகுதிகளை சேர்ந்த மக்கள் கணிசமான அளவு இருக்கிறார்கள்.

அங்கு வாக்குப்பதிவு இயந்திரத்தால் வெற்றி பெற்றோம் என்று கூறும் திருமாவளவன் தமிழ்நாட்டில் தாங்கள் அதே வாக்குப்பதிவு இந்திரத்தால் வெற்றி பெற்றோம் என கூற வேண்டும்.

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியும் ஜார்க்கண்டில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதனை வாக்குப்பதிவு எந்திரத்தால் பெற்ற வெற்றி என்று சொல்லலாமா? நாங்கள் வெற்றி பெறும் போதெல்லாம் அதற்கு வாக்குப்பதிவு எந்திரம் தான் காரணம் என்றும் அவர்கள் வெற்றி பெறும் போதெல்லாம் மக்கள் ஆதரவு என்றும் திருமாவளவன் கூறுகிறார்.

எனவே ஸ்டாலினை திருப்தி படுத்துவதற்கு திருமாவளவன் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். ஆனால் பாஜக தொண்டர்களின் உழைப்பையோ மக்களின் ஆதரவையோ அவர் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

மதுவிலக்கு மாநாடு நடத்திய திருமாவளவன் ஸ்டாலினிடம் சென்று மாநாடு நடத்தினேன். மதுவிலக்கு எப்போது கொண்டு வரப்போகிறீர்கள் என்று கேள்வி எழுப்ப வேண்டும். அதை விட்டுவிட்டு மாநாட்டை பெயரளவுக்கு நடத்திய திருமாவளவனுக்கு எங்களை குறை சொல்வதற்கு தகுதி ஏதுமில்லை என்று தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top