முதல் மாநாடு வெற்றி பெற்றதையடுத்து ஆழ்வார்குறிச்சி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தினர் நடிகர் விஜய் கட்சி தொடங்கப்பட்டு முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார் .
இதனை விழாவாக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். .அதனை முன்னிட்டு பகுதிகளில் உணவு வழங்கல் நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தென்காசி மாவட்ட செயலாளர் நியாஸ் தலைமையில் கடையம் ஒன்றிய செயலாளர் கிரிப்சன் மற்றும் தயாள் சரண் முன்னிலையில் இன்று ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள சிவசைலம் ஔவை ஆசிரமம் மற்றும் காந்தி காது கேளாதோர் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கினர்.
அந்த குழந்தைகள் விஜய்யை நேரில் சந்திப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தனர்.