வங்கதேசத்தில் இஸ்கான் கோயில் தலைமை துறவியை கைது செய்த வங்கதேச அரசை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பாரத பிரதமருக்கு அனுப்பி வைக்க இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி தலைமையில் பொறுப்பாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில்: வங்கதேசத்தில் கடந்த 26/11/2024 அன்று வங்கதேச அரசால் அங்குள்ள இஸ்கான் கோயில் தலைமை துறவி ஸ்ரீ சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு கைது செய்யப்பட்டதை தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
இஸ்கான் மற்றும் பிற இந்து அமைப்புகள் இதுவரை வங்கதேசத்தில் இஸ்லாமிய அடிப்படை வாதிகள் தாக்குதலுக்கு எதிராக அமைதியான ஜனநாயக முறையில் போராடி வருகிறார்கள். இந்துக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க வங்கதேச அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கையான அழுத்தம் கொடுக்க வேண்டும் என உலகில் வாழும் ஒட்டு மொத்த இந்துக்களின் குரலாக தற்போது ஒலித்துக் கொண்டு இருக்கிறது. இஸ்கான் தலைமைத் துறவி ஸ்ரீ சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு உடனடியாக நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும் .
மேலும் காரணம் இன்றி இந்து மதத் தலைவர்களையும் குருமார்களையும் கைது செய்வதை வங்கதேச அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு வாங்கதேச அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் இராமமூர்த்தியுடன், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் நாகர்கோவில் ராஜேஷ், மாவட்ட துணை தலைவர், சோலைராஜன் , மாவட்ட துணை தலைவர் இளநீர் ரமேஷ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டியா பிள்ளை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், சேர்மக்கனி, தேனி நகர தலைவர் சிவராமன், தேனி நகர பொதுச்செயலாளர் அரண்மனை முத்துராஜ், தேனி நகர அமைப்பாளர் கனகுபாண்டி, தேனி நகர பொருளாளர் நாகராஜ், நகர துணைத் தலைவர் சிவா, நகரச் செயலாளர்கள் எல்.ஆர் புயல் ஐயப்பன் , அழகு பாண்டி, நகரத் துணைச் செயலாளர்கள் சுரேஷ், ராமநாதன், அரண்மனை ஜீவா உடன் இருந்தனர்.