Close
டிசம்பர் 19, 2024 9:56 காலை

அமித் ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

அமித் ஷாவை கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

சோழவந்தானில் அமித்ஷாவை கண்டித்து வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சோழவந்தான்:

சட்ட மாமேதை அம்பேத்கரை உள்துறை அமைச்சர் அமித் ஷா அவமதித்ததாக கூறி தமிழக முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற வேண்டும் என திமுக தலைமை அறிவித்திருந்தது.

மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம், சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமை தாங்கினார். சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்யபிரகாஷ் முன்னிலை வகித்தார்.

பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் சி பி ஆர் சரவணன் துணைத்தலைவர் லதா கண்ணன் முள்ளிப்பள்ளம் கேபிள் ராஜா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி மகளிர் அணி மாவட்ட தலைவர் சந்தான லட்சுமி பேரூராட்சி கவுன்சிலர் செல்வராணி ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி நிர்வாகிகள் ஊத்துக்குளி ராஜா திருவேடகம் ராஜா என்ற பெரிய கருப்பன் முட்டை கடை காளி மாணவர் அணி எஸ் ஆர் சரவணன் சங்கங்கோட்டை சந்திரன் ரவி கண்ணதாசன் ரிஷபம் சிறுமணி தேங்காய் கடை தவம் நந்தகுமார் சபாபதி அயப்பன் நாயக்கன்பட்டி தமிழ் திருவேடகம் பழனியம்மாள் ஆறுமுகம் இளைஞர் அணி பால் கண்ணன் உள்படபலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top