Close
செப்டம்பர் 20, 2024 1:30 காலை

ஏஐடியுசி மகளிர் கட்டுமானத்தொழிலாளர்கள் சார்பில் உலக மகளிர் தின கருத்தரங்கு

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற உலக மகளிர் தின விழா

பெண் கட்டுமான தொழிலாளர்கள் சார்பில்  உலக மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம் தஞ்சையில் நடைபெற்றது.

ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர் சங்க சார்பில் தஞ்சாவூர் ஏஐடியூசி அலுவலக கூட்டரங்கில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்  (8~3~22)  தொண்டராம்பட்டு சே. எலிசபெத், பாப்பாநாடு எம். ஜமுனாராணி, தஞ்சாவூர் சத்யா நகர் வி.லலிதா ஆகியோர் தலைமையில்  நடைபெற்றது.

தமிழ் தாய் வாழ்த்தை க.திலகவதி  பாடியதுடன் கருத்தரங்கம் துவங்கியது. பெண்களுக்கான உரிமை பாடலை தோழியர் லீதியான் பாடினார். கருத்தரங்கில் வழக்கறிஞர் ச.இமயா, வாழ்க வளமுடன் செம்மலர்செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

சட்டக்கல்லூரி மாணவி ச.இமயா தனது உரையில்,
பெண்களுக்கான சம உரிமை பெற நாமே முன் முயற்சி மேற்கொள்ள வேண்டும். குழந்தை வளர்ப்பிலிருந்து சம உரிமையுடன் வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு முன்னுரிமை என்ற பெரும்பாலான பெற்றோர்களின் கருத்துகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.

பெண்கள் பெரிய படிப்புகள் முடித்திருந்தாலும் குறுகிய வட்டத்திற்குள் அடைத்து திருமண கடமையை பெரிதாக்கி அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பில்லாத நிலையை போக்கி பெண்கள் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டே வாழ்நிலையை அமைத்துக்கொள்ளும் நிலைமைகளை உருவாக்கிட வேண்டும்.

அனைத்து துறைகளிலும் பெண்களின் சாதனைகளை பெருமைப்படுத்தி உற்சாகப்படுத்த வேண்டும், பெண்கள் சொந்த காலில் நிற்பதற்கான சூழலை உருவாக்க பெற்றோர்களே வழிகாட்ட வேண்டும் என்றார்.

இடதுசாரி சிந்தனையாளர், வாழ்க வளமுடன் செம்மலர் செல்வி தனது உரையில்,  பெண்கள் வலிமையானவர்கள் என்பதை நிரூபிக்க தங்களுடைய குடும்பத்திலேயே ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலையில் கட்டமைக்க வேண்டும்.

பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் குற்றங்களை எதிர்த்து சமரசமின்றி போராட தயாராக வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கூட்டத்தில், தஞ்சாவூர் சுதா, மகேஸ்வரி, ஆர். சிவகாமி, டி யமுனா, ஆர் ராணி, பாப்பாநாடு கண்ணகி வல்லம் செந்தமிழ்ச்செல்வி, ரேணுகா மற்றும் முன்னணி தோழர்கள் பங்கேற்றனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பெண் கட்டுமான தொழிலாளர்கள் சித்தாள் வேலை மட்டுமே என்ற நிலையி லிருந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து கட்டுமான அனைத்து பிரிவுகளிலும் வேலை பார்ப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும், குறைந்தபட்ச சட்ட கூலி வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும், வெளிமாநில தொழிலாளர்கள் ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்திட 85% வேலைவாய்ப்புகளை உள்ளூர் தொழிலாளர்களுக்கு ஒதுக்கி சட்டம் கொண்டு வரவேண்டும்.

பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 50 ஆக குறைக்க வேண்டும், பேறுகாலப் பெண்கள் சட்டப்படி ஆறு மாதம் சம்பளத்துடன் வழங்கப்பட வேண்டும், இளம் விதவை தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 5000 நிதி உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top