தனித்தமிழர் சேனையின் தலைவர் க.நகைமுகன் (14-03-2016) நினைவுநாள்.
தமிழ்நாட்டில் தமிழரல்லாத அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், திரைக்கலைஞர்கள் பட்டியலை தயாரித்து துண்டறிக்கையாக வெளியிட்டவர்.
மண்ணின் உரிமை அந்தந்த மாநில மக்களுக்கே முன்னுரிமை எனும் கோட்பாட்டை முன்னெடுத்தவர். திராவிடர் கழக மாணவரணி, வலது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர், தனித்தமிழர் சேனை என பரிணமித்தவர்.
தமிழ் ஈழ ஆதரவாளராக இருந்த காரணத்தால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தவர். பொறியாளரான இவர், பால்தாக்கரே, சிம்ரத்சிங் மான், கன்சிராம், லால்டெங்கா, பரூக் அப்துல்லா போன்ற தலைவர்களுடன் தொடர்புகொண்டு BAMCEF என்ற அமைப்பை உருவாக்கியவர்.
தமிழரல்லாத அதிகாரிகள் இவரின் உணர்வுக்கு எதிராக இவர்மீது 18 பொய் வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட சமூக அமைப்புக்களுடன் தொடர்புகொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு தூண்டுகோலாய் இருந்தவர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, ஆத்திக்காடு-தெக்கூர் கிராமத்தில் உள்ள இவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் உறவினர்கள் ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர்