Close
செப்டம்பர் 18, 2024 12:26 காலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகர செயலாளர் முத்துகுமார் தாயார் படத்திறப்பு

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற படத்திறப்பு விழாவில் பங்கேற்ற இந்தியகம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள்

இந்திய தேசிய மாதர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட பொருளாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகர செயலாளர் முத்துகுமார் தாயார் வசந்தா படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய தேசியமாதர் சம்மேளனத்தின் முன்னாள் மாவட்ட பொருளாளர், தஞ்சை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகர துணை செயலாளர் ஆர் பக்கிரிசாமி துணைவியார் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகர செயலாளர் ஆர் .பி. முத்துக்குமரன்  தாயார் வசந்தா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 6.3. 20 22 அன்று காலமானார்.

அவரது உருவப்படத்திறப்பு நிகழ்வு புதன்கிழமை  தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மருதம் அவரது இல்லத்தில் நடைபெற்றது .

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும், திருவாரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான வை.சிவபுண்ணியம் கலந்து கொண்டு  வசந்தா உருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்வில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, குறள்நெறிச்செல்வர், முன்னாள் வணிகவரி துறை அமைச்சர். எஸ் .என்.எம் உபயதுல்லா, ஏஐடியுசி மாநில செயலாளர் சி.சந்திரகுமார், மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், இந்திய தேசிய காங்கிரஸ் நிர்வாகி வயலூர் எஸ். இராமநாதன்,

சிபிஐ(எம்) மாநகர செயலாளர் வடிவேலன், நிர்வாகிகள் என்.குருசாமி, சரவணன், பி. செந்தில் குமார் ,சிபிஐ நிர்வாகிகள் ஜி.கிருஷ்ணன், வீரமோகன், சீனி. முருகையன், இரா.இராமச்சந்திரன், செந்தில்குமார், ஆர்.எஸ்.பாலு, ஆம்பலாபட்டு கோ.சக்திவேல் , பூபேஷ் குப்தா, மாதர் சங்க மாவட்ட தலைவர் தனசீலி ,ஏஐடியூசி நிர்வாகிகள் தி.கோவிந்தராஜன், வெ.சேவையா, துரை.மதிவாணன், கே.சுந்தரபாண்டியன், பி.அப்பாத்துரை, பி.செல்வம்,டி. கஸ்தூரி எஸ்.தாமரைச்செல்வன் சி.ராஜ மன்னன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top