Close
செப்டம்பர் 19, 2024 11:16 மணி

பொது வேலை நிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற்சங்கங்கள் தெருமுனை பிரசாரம்

தஞ்சாவூர்

வேலைநிறுத்தத்தை விளக்கி தஞ்சையில் அனைத்து தொழில்சங்கங்கள் சார்பில் நடந்த தெருமுனைபிரசாரம்

பொது வேலை நிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் தஞ்சையில் தெருமுனைப் பிரசாரம்  நடைபெற்றது.

மார்ச் 28, 29 இந்தியா முழுதும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகளுக்கு எதிரான கார்ப்பரேட் ஆதரவு ,இந்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

இந்த போராட்டத்தை ஒட்டி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று 23~3~22 தஞ்சாவூர் கீழவீதி நிக்கல்சன் கூட்டுறவு வங்கியின் முன்பு பிரச்சார இயக்கம் இன்று மாலை 6 மணிக்கு துவங்கியது துவங்கியது. கீழவாசல் காமராஜர் சிலை, தஞ்சாவூர் மணிக்கூண்டு, காவேரி சிறப்பங்காடி, ரயிலடி ,அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

நிக்கல்சன் வங்கி முன்பு துவங்கிய பிரசார இயக்கத்துக்கு தொமுச மாவட்ட செயலாளர் கு,சேவியர், சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெயபால், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

 அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் க.அன்பழகன், ஜெனரல் இன்சுரன்ஸ் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சத்தியநாதன் ஆகியோர் பிரசார இயக்கத்தை வைத்து சிறப்புரையாற்றினர். இதில் ஏஐடியூசி மாநில செயலாளர் சி.சந்திரகுமார், நிர்வாகிகள் வெ.சேவையா, தி.கோவிந்தராஜன், துரை.மதிவாணன்.

பி.செல்வம்,ஜி. கணபதி, எம்.பாலமுருகன், ஆர்.பி.முத்துக் குமரன், எல்.பி.எப் நிர்வாகி எழில்அரசு, சிஐடியூ தொழிற் சங்கத் தலைவர்கள் கோ.கோவிந்தராஜன்,கே.அன்பு, ஈ.டி.எஸ் மூர்த்தி, ஜெ.வெங்கடேசன், எஸ்.செங்குட்டுவன், எஸ்.ராமசாமி.

ஐஎன்டியூசி நிர்வாகிகள் ஏ.ரவிச்சந்திரன், பாரதிதாசன், ஜி .மணிவாசகன், பி சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரசாரத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட துண்டறிக்கைகள் மாநகர முழுதும் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டு  வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு திரட்டப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top