Close
செப்டம்பர் 20, 2024 3:56 காலை

புதுகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது பதக்கம் வழங்கல்

புதுக்கோட்டை

மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆசிரியருக்கு விகுது வழங்கிய மாவட்டத்தலைவர் நகர்மன்ற உறுப்பினர் ஜெ.பர்வேஸ்

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும்  தங்க நாணயம், வெள்ளிப் பதக்கம் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு , புதுக்கோட்டை மாவட்டத்தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளரும் புதுகை நகர்மன்ற உறுப்பினரு மான ஜெ.பர்வேஸ் தலைமை வகித்து ஆசிரியர்களுக்கு விருது வழங்கி பேசியதாவது: தளபதியாரின் உத்தரவின்படி, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுசெயலாளர் முன்னாள் எம்எல்ஏ புஸ்ஸி என்.ஆனந்த்  வழிகாட்டுதலுடன் மாவட்ட உள்ளூர் வாராந்திர சமூக நலப் பணிகள் திட்டத்தின் கீழ்  இந்த விழா நடத்தப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவச் செல்வங்களை நல்வழி நடத்தி பல்வேறு துறைகளில் முத்திரை பதித்திடும் சாதனையாளர்களாக உருவாக்கிட அயராது பணியாற்றி வருகின்ற ஆசிரிய ஆசிரியைகளை கெளரவிக்கும் விதமாக புதுக்கோட்டை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 1 கிராம் தங்க நாணயம் , 10 கிராம் வெள்ளி மெடல் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது என்றார் பர்வேஸ் .

விழாவில், ஆசிரியர்கள், மற்றும் இயக்க நிர்வாகிகள்  உள்பட திரளானோர் பங்கேற்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top