Close
செப்டம்பர் 20, 2024 4:02 காலை

புதுக்கோட்டையில் அனைத்து தொழில்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம்

பொன்னமராவதியில் நடந்த அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற தொழில்சங்கத்தினர்

புதுக்கோட்டையில் ஒன்றிய தலைமை தபால் அலுவலகம் முன்பு அனைத்துத் தொழில்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பேரூராட்சி நகராட்சிகளுக்கு இத் திட்டத்தை விரிவு படுத்திட வேண்டு என வழியுருத்தி. அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.சங்கர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.சி.சோமையா. ஆகியோர் தலைமை வகித்தனர்.

கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் விதொச மாநில செயலாளர் தோழர் எம்.சின்னத்துரை. விவசாயிகள் சங்கத்தின் தேசியக்குழு உறுப்பினர் மு மாதவன் ஆகியோர் பங்கேற்றனர் பேருந்து நிலையத்தி லிருந்து தபால் நிலையம் வரை பேரணி சென்று மறியல் போராட்டம் நடைபெற்றது .

 தொழிலாளர் சட்டங்கள் (லேபர் கோட்ஸ்) என்ற பெயரில் தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியதை ரத்துசெய். அதேபோன்று அத்தியாவசிய பாதுகாப்புப் பணிகள் சட்டத்தையும் (EDSA – Essential Defence Services Act) ரத்து செய்க.

 வேளாண் சட்டங்களை ரத்து செய்தபோதிலும், சம்யுக்த கிசான் மோர்ச்சா முன்வைத்துள்ள இதர ஆறு கோரிக்கைக ளையும் நிறைவேற்ற வேண்டும். எவ்விதத்திலும் தனியார் மயத்தை அனுமதியோம். தேசியப் பணமாக்கும் திட்டத்தை ரத்துசெய்துள்ளனர்.

அங்கன்வாடி, ஆஷா ஊழியர்கள், மதிய உணவு ஊழியர்க ளுக்கும் இதரத் திட்ட ஊழியர்களுக் கும் குறைந்தபட்ச ஊதியத்துடன் காலமுறை ஊதியம் வழங்குக.  முறைசாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டுவரவேண்டும்.

 வருமானவரி செலுத்தாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் ரூ.  7,500  உணவு மற்றும் வருமான ஈடாக அளிக்க வேண்டும்.வீடு இல்லாதவர்களுக்கு வீடும்.மனையும் வழங்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றின்போது பணியாற்றிய முன்னணித் தொழிலாளர்கள் அனைவருக்கும் முறையான பாதுகாப்பு மற்றும் இன்சூரன்ஸ் வசதிகளை  வழங்க வேண்டும்.

 வேளாண்மை, கல்வி, சுகாதாரம் மற்றும் முக்கியமான பொதுப் பணிகளில் பொது முதலீட்டை அதிகரித்திடு. பணக்காரர்கள் மீது செல்வ வரி விதித்திடு. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டமைக்க வேண்டும். பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரியைக் கணிசமாகக் குறைத்திடு. விலைவாசியைக் கட்டுப்படுத்திட உருப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஒப்பந்த ஊழியர்கள், திட்ட ஊழியர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.தேசியப் பணமாக்குத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தி FC ன் கீழான குறைந்தபட்ச ஓய்வூதியத்தில் கணிசமான குறைந்தபட்ச ஓய்வூதியம் அளிக்க வேண்டும்.

பொன்னமராவதியில்… சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இந்தியாவை பாதுகாப்போம் என்கிற முழக்கத்துடன் சிஐடியு,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக பொன்னமராவதி காந்தி சிலை, அண்ணாசாலை வழியாக பேரணியாக சென்று பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பாக  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் கே.சண்முகம், வி.தொ.ச மாவட்ட செயலாளர் ஏனாதி ஏ.எல்.ராசு, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.தீன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், 34 பெண்கள் உட்பட 96 பேர் கைதாகினர்.

சிபிஎம் ஒன்றிய செயலாளர் பக்ருதீன், சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வி.தொ.ச.பொறுப்பாளர் ஆர்.பிரதாப்சிங், சிஐடியூ நிர்வாகிகள்,வி.தொ.ச நிர்வாகிகள், தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top